சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்று வந்த மண்டல பூஜை நிறவு பெற்று ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக வருகின்ற 30ம் தேதி நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் 16ம் தேதி மண்டல கால பூஜைகளுக்காக திறக்கப்பட்டது. மண்டல பூஜைகள் நடைபெற்ற நிலையில், நேற்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு ஹரிவராசனம் பாடல் பாடப்பட்டு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
புதுவையில் மாநில அந்தஸ்து கோரி இன்று முழு அடைப்பு போராட்டம்
முன்னதாக மண்டல கால பூஜையின் போது நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன்படி மண்டல பூஜை காலமான 42 நாட்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய பிரகாசமான வாய்ப்பு - கார்த்தி சிதம்பரம் ஆரூடம்
வரும் 30ம் தேதி மாலை மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. 30ம் தேதி திறக்கப்படும் கோவில் நடை 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் ஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் மற்றும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் வழிபாடு என மகர விளக்கு பூஜை காலம் முடிந்து ஜனவரி 20ம் தேதி நடை அடைக்கப்படும் என்று தேஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.