
மராட்டிய மாநிலம் தாராவியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி வேனில் இருந்து கடந்த 16-ம் தேதி ரூ.1.5 கோடி மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்து சென்ற நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது தற்போது கைது செய்துள்ளனர் .
அதாவது மராட்டிய மாநிலம், மும்பை அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு கடந்த 16-ம் தேதியன்று வங்கிக்கு சொந்தமான பணத்தை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக வேனில் இருந்த ரூ 1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை செய்து வந்தனர்..
இதனை தொடர்ந்து , மும்பை சீயோன் மற்றும் பாந்த்ரா இணைப்பு சாலை அருகே, அந்த வேன் நிறுத்தி வைகபட்டிருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் இது தொடர்பாக 3 குற்றவாளிகளை கைது செய்து , அவர்களிடமிருந்த 15.42 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்