உ.பி.யில் நெகிழ்ச்சி சம்பவம்... 26 ஆண்டுகள் இந்து கோயிலை பராமரிக்கும் இஸ்லாமியர்கள்!

By vinoth kumarFirst Published Sep 18, 2018, 7:38 AM IST
Highlights

26 ஆண்டுகள் இந்து கோயிலை முஸ்லீம்கள் நிர்வகித்து வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. அடிக்கடி இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த ருசிகர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. 

26 ஆண்டுகள் இந்து கோயிலை முஸ்லீம்கள் நிர்வகித்து வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. அடிக்கடி இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரம் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த ருசிகர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகரில் இந்து கோயிலை முஸ்லீம்கள் பராமரித்து வருகின்றனர். முஷாபர்நகரில் உள்ள லீதிவாலா என்ற இடத்தில் முஸ்லீம்கள் அதிக பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இந்து கோயிலும் அமைந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு முன் இந்துக்கள் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. 

பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு கலவரத்தால் இந்துக்கள் அப்பகுதியில் விரட்டப்பட்டனர். இதன் பிறகு சுமார் 26 ஆண்டுகளாக அப்பகுதியில் வசிக்கும் முஸ்லீம் மக்களே கோயிலை பராமரித்து வருகின்றனர். கோயிலை தூய்மையாக வைத்துக்கொள்வது,  ஒவ்வொரு தீபாவளிக்கும் வர்ணம் பூசுவது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளை முஸ்லீம்களே செய்கின்றனர். 

இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த  ஒருவர் கூறுகையில், தற்போது இங்கு இந்து குடும்பம் இல்லை. அதை காரணமாக வைத்து நாங்கள் இந்த கோயிலை இடித்து விட்டால் பராமரித்து வருகிறோம் என்றார். 

click me!