21ஆயிரம் ரூபாய்க்கு தங்கத்தால் ஆன இனிப்பு வழங்கி கார் வாங்கியதை கொண்டாடிய விவசாயி;

By sathish kFirst Published Sep 17, 2018, 7:44 PM IST
Highlights

பொதுவாகவே நாம் நினைத்த காரியம் நிறைவேறினார் சுற்றத்தாருக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடுவது வழக்கம் தான். ஆனால் புனேயை சேர்ந்த விவசாயி இருவர் தன் சந்தோஷத்தை கொண்டாட இனிப்பு வழங்கிய விதம் அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

பொதுவாகவே நாம் நினைத்த காரியம் நிறைவேறினார் சுற்றத்தாருக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடுவது வழக்கம் தான். ஆனால் புனேயை சேர்ந்த விவசாயி இருவர் தன் சந்தோஷத்தை கொண்டாட இனிப்பு வழங்கிய விதம் அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. புனேவை சேர்ந்த சுரேஷ் போகலே எனும் விவசாயி, ஜாக்குவார் ரக கார் ஒன்றை வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசைப்பட்டிருக்கிறார்.

சமீபத்தில் தான் அவரின் கனவு நிறைவேறி இருக்கிறது.ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் செலவு செய்து  ஜாக்குவார் ரக கார் ஒன்றை தான் நினைத்தது போலவே வாங்கி இருக்கிறார் சுரேஷ் போகலே. அந்த சந்தோஷத்தை கொண்டாட ஒரு கிலோ 7000 ரூபாய் மதிப்புள்ள இனிப்புகளை வாங்கி அப்பகுதி மக்களுக்கு கொடுத்த்இருக்கிறார். தங்கத்தால் ஆன மெல்லிய தாளில் சுற்றப்பட்டிருக்கும், இந்த இனிப்புகளை ஸ்பெஷலாக ஆர்டர் செய்து வாங்கி இருக்கிறார் சுரேஷ் போகலே.


 மொத்தம் 21000 ரூபாய்க்கு 3 கிலோ அளவில் இந்த இனிப்பை வாங்கி இருக்கின்றனர். இது குறித்து சுரேஷ் கோகலேவின் மகன் பேசும் போது , எங்கள் அப்பா அவர் ஆசைப்பட்டபடி மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதனால் அதற்கான கொண்டாட்டமும் யாரும் மறக்க முடியாதபடி சிறப்பாக இருக்க வேண்டும் இதனால் தான் இப்படி விலை உயர்ந்த இனிப்புகளை வாங்கி  அனைவருக்கும் கொடுத்திருக்கிறோம் என கூறி இருக்கிறார். 
இதனால் இந்த சம்பவம் அப்பகுதி மக்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை நடக்கும் இதே நாட்டில் தான் இப்படி ஆடம்பரமாக வாழும் விவசாயிகளுக் இருக்கிறார்களா? என சுரேஷின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கவும் செய்திருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

click me!