குஜராத்,ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை... கரை புரண்டு ஓடும் வெள்ளம் - இடம்பெயர்ந்த 25,000 பேர்!!

 
Published : Jul 25, 2017, 10:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
குஜராத்,ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை... கரை புரண்டு ஓடும் வெள்ளம் - இடம்பெயர்ந்த 25,000 பேர்!!

சுருக்கம்

25000 people left from gujarat due to rain

வட மாநிலங்களில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில்  மகாராஷ்ட்ரா , குஜராத், ராஜஸ்தான் மற்றும் அதனையொட்டி உள்ள மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

கனமழை காரணமாக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கான பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு குழு மற்றும் ராணுவமும் களமிறங்கி உள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போதைய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 25 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பனாஸ்காந்தா, சாபார்காந்தா, ஆனந்த், பதான் மற்றும் வால்சாத் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உள்ளது. 

பனாஸ்காந்தா மாவட்டத்தில் மட்டும் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து சுமார் 11 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் பெய்த கனமழையால் சபர்மதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்திலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தெற்கு ராஜஸ்தானில் பெய்த கனமழை காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தாந்திவாடா, சிபு மற்றும் தாரோய் ஆகிய அணைகள் நிரம்பி வழிகின்றன.

தெற்கு ராஜஸ்தானில் பெய்த கனமழை காரணமாகவும் பனாஸ்காந்தா, பதான் மற்றும் ஆனந்த் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளில் தேசிய பேரிடர் படையின் 12 குழுக்கள் மீட்பு பணியில் இறங்கி உள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை உள்பட ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கூடுதல் படைகளும் அங்கு அனுப்பட்டு உள்ளது.

குஜராத் மாநிலத்தில் மழைக்கு கடந்த 40 நாட்களில்  70 பேர் உயிரிழந்து உள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்