கழிப்பறை கட்ட காசு இல்லையா? மனைவியை விற்றுவிடு….கலெக்டர் பேச்சால் சர்ச்சை

First Published Jul 25, 2017, 7:53 AM IST
Highlights
Bihar collector speech

கழிப்பறை கட்ட காசு இல்லையா? மனைவி விற்றுவிடு….கலெக்டர் பேச்சால் சர்ச்சை

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட கலெக்டர் ஒருவர், கிராம மக்களிடம், “ கழிப்பறைகட்ட பணம்  ஏற்பாடு செய்யமுடியாவிட்டால், மனைவியை விற்றுவிடுங்கள்’’ எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி ஸ்வாச் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மேலும், கிராமங்களில் திறந் தவௌிக் கழிப்பிடத்தை  பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வலியுறுத்தியுள்ளார். இதற்காக மத்திய அரசு சார்பில் மானியத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாளந்த மாவட்டக் கலெக்டராக இருக்கும் கன்வால் தனுஜ் கடந்தவௌ்ளிக்கிழமை ‘ஸ்வாச்சாதா மஹாசபா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி கிராம மக்களிடம் கழிப்பறை கட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது, கலெக்டர் கன்வால்  கிராம மக்கள் முன் பேசுகையில், “ கழிப்பறை கட்டுவதற்காக ரூ.12 ஆயிரம் ஏற்பாடு செய்வதில் யாருக்கேனும், யார் குடும்பத்துக்கேனும் கவுரப் பிரச்சினை இருக்கிறதா?’’ எனக் கேட்டார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பேசுகையில், “ கழிப்பறை கட்டுவதற்காக என்னிடம் ரூ.12 ஆயிரம் பணம் இல்லை’’ என்றார்.

இதைக் கேட்ட கலெக்டர் கன்வால், பொறுமை இழந்து, “ கழிப்பறை கட்ட குறைந்த அளவுகூட பணம் இல்லாவிட்டால், உன் மனைவியை விற்று பணம் கொண்டுவா’’ என்றார். கலெக்டரின் பேச்சு வீடியாவாக பதிவு செய்யப்பட்டு இருந்து. அது இப்போது சமூக ஊடகங்கள்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கன்வால் ஊடகங்களுக்கு எழுதிய கடிதத்தில், “ கழிப்பறை கட்டுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நான் பேசிய தவறான, மோசமான பேச்சுதான் இப்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. என்னுடைய பேச்சு முழுவதும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதை பற்றிதான், யாரையும் மரியாதைக்குறைவாக பேசும் படி இல்லை’’ எனத் தெரிவித்து இருந்தார்.

பீகார் மாநில ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷர்வான் குமாரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் கூறுகையில், “ மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி, அவர்கள் வீடுகளில் கழிப்பறை கட்டவைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். இதுபோன்ற பணியில் இருக்கும் அதிகாரிகள் நாவை அடக்கிப் பேச வேண்டும். கழிப்பறை குறித்த பயன்களை மக்களுக்கு சொல்வது அவசியம். கழிப்பறை இல்லாமல் திறந்த வௌியை பயன்படுத்தினால், ஏற்படும் பிரச்சினைகள், நோய்களையும் அவர்களுக்கு எடுத்துக் கூறி, கழிப்பறையின் முக்கியத்தவத்தை உணர்த்த வேண்டும். அதை விடுத்து இதுபோன்ற மோசமான பேச்சை பேசக்கூடாது’’ என்றார்.

 

 

 

 

tags
click me!