ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில அமைச்சர் ரோஜாவின் கார் மீது ஜனசேனா கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில அமைச்சர் ரோஜாவின் கார் மீது ஜனசேனா கட்சியினர் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ரோஜாவின் உதவியாளர் படுகாயமடைந்துள்ளார். இந்த விவகாரம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என வலியுறுத்தினார். ஆந்திர மக்கள் மத்தியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதனால் இத்திட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவுக்கு மூன்று தலைநகரங்கள் வலியுறுத்தும் விசாகா கர்ஜனை என்ற பெயரில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: 20 நாளில் தமிழகத்தை முற்றுகையிடும் 50 மத்திய அமைச்சர்கள்.! என்ன காரணம் தெரியுமா.? ஸ்டாலினை அலறவிடும் அண்ணாமலை
ஆளும் கட்சி அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் ரோஜா, ஜோகி ரமேஷ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாராவ் உள்ளிட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டுவிட்டு விசாகப்பட்டினம் விமான நிலையம் திரும்பினார். இந்நிலையில் அங்கு ஜன சேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் வேறோரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விசாகப்பட்டினம் விமான நிலையம் வர இருந்தார், அவரை வரவேற்க அங்கு 300க்கும் அதிகமான ஜனசேனா கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் அங்கு வந்ததால் ஜனசேன கட்சியினர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படியுங்கள்: subramanian swamy: சீனாவுக்கு பரிசு!தேசத்திடம் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்!சுப்பிரமணியன் சுவாமி விளாசல்
மேலும் அமைச்சர் ரோஜாவின் வாகனத்தின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். அதில் ரோஜாவில் உதவியாளர் பலத்த காயம் அடைந்தார், ரோஜாவின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் படுகாயமடைந்தனர். விமான நிலையம் வந்திருந்த பொதுமக்களும் காயமடைந்தனர், இதனால் விமான நிலையத்தில் வெளியில் பரபரப்பு ஏற்பட்டது, ஆந்திர மாநில அமைச்சர் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக ஜனசேன கட்சியை சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பவன்கல்யாண் தங்கியிருந்த ஓட்டலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது