Lok Sabha Election Results 2024: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முன்னிலை / வெற்றி நிலவரம் வெளியாகி வருகிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா? இந்தியா கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவருமா? என பொதுமக்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முன்னிலை / வெற்றி நிலவரம் வெளியாகி வருகிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்குமா? இந்தியா கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவருமா? என பொதுமக்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. 8.30 மணி முதல் மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வழக்குகள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் அடிப்படையில் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், இந்தியா கூட்டணிக்கும் கணிசமான இடங்களில் முன்னிலை கிடைத்துள்ளது.
undefined
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: மொத்தம் 543 தொகுதிகள்
கட்சி / கூட்டணி |
வெற்றி / முன்னிலை |
பாஜக கூட்டணி |
294 |
இந்தியா கூட்டணி |
232 |
பிற |
17 |
தமிழ்நாடு, புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் 2024: மொத்தம் 40 தொகுதிகள்
கட்சி / கூட்டணி |
வெற்றி / முன்னிலை |
திமுக கூட்டணி |
40 |
அதிமுக கூட்டணி |
0 |
பாஜக கூட்டணி |
0 |
பிற |
0 |
தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றிமுகத்துடன் உள்ளது. தருமபுரியில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணிக்கும் திமுக வேட்பாளர் ஆ.மணிக்கும் கடும் போட்டி காணப்படுகிறது.
இதேபோல விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூருக்கும் இடையே பரபரப்பான போட்டி உள்ளது.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் பாஜக 10 தொகுதிகளில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது. 29 இடங்களில் அதிமுக 2வது இடத்தைப் பிடித்துள்ளது.