மீண்டும் இரு தொகுதிகளில் மோடி போட்டி? ஒடிஷாவில் உள்ள புரி தொகுதிக்கு குறி..!

By vinoth kumarFirst Published Jan 3, 2019, 10:17 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தலைவர்கள் தொகுதியைத் தேர்ந்தெடுப்பதிலும் பிஸியாகி இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலும் குஜராத் மாநிலம் வதோதராவிலும் மோடி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மோடி, வாரணாசி தொகுதி எம்.பி.யாக தொடர்ந்தார். வதோதரா எம்.,பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வாரணாசியில் நரேந்திர மோடி போட்டியிட உள்ளார். 80 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள உ.பி.யில் பிரதமர் போட்டியிடுவது பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்ற வகையில் இந்த முடிவை பிரதமர் எடுத்திருக்கிறார். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மற்ற இரு பெரிய கட்சிகளான சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடத்திவருகின்றன. அப்படி இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால், அது பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கும். 

வாரணாசி தொகுதியில் மோடி கடுமையான பலபரீட்சையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்கும் வகையில் கடந்த முறையைப்போலவே இரண்டு தொகுதிகளில் பிரதமர் மோடியைப் போட்டியிட வைக்கலாம் என்று பாஜக தலைமை முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதற்காக ஒடிஷாவில் உள்ள புரி தொகுதியை தயார் செய்யும்படி அந்த மாநில பாஜகவுக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது.

 

இந்தத் தகவலை உறுதியாக்கும் வகையில், ‘புரி தொகுதியில் மோடி போட்டியிட 90 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன’ என்று அந்த  மாநில பாஜக தலைமையும் தெரிவித்துள்ளது. இன்னும் சில தினங்களில் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக தலைமை தெரிவித்துள்ளது. எனவே கடந்த தேர்தலை போல இந்த முறையும் இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

click me!