அய்யோ…இப்படி குறைச்சுடாங்களே…..2019-ல் இந்தியா பொருளாதார வளர்ச்சி இப்படியா இருக்கு…அதிர்ச்சியளித்த ஐஎம்எப்

By Asianet TamilFirst Published Jan 21, 2020, 6:45 PM IST
Highlights

ஆனால் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதம் உயரக்கூடும், அதற்கு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் இது சாத்தியமாகும்.  2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதம் உயரக்கூடும், 2021-ம் ஆண்டில் 6.5சதவீதம் அதிரிக்கலாம். 

2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதம் அளவுக்கு இருந்தது என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் கணித்துள்ளது.
வங்கியல்லாத நிதித்துறை கடும் நெருக்கடியில் இருந்தது, கிராமப்புற மக்களின் வருமானம் வளர்ச்சி குறைவு  ஆகியவை நாட்டின் வளர்ச்சி குறைய முக்கியக்காரண் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு இன்று தொடங்கிய நிலையில் ஐஎம்எப் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 4.8சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேசமயம், 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக வளரும், 2021-ம் ஆண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநரும் இந்தியாவில் பிறந்தவருமான கீதா கோபிநாத் கூறுகையில், “ கிராமப்புற மக்களின் வருவாயில் பெரியஅளவில் வளர்ச்சி இல்லாததும், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் சிக்கலில் இருப்பதுமே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியக் காரணமாகும்.உள்நாட்டில் பொருட்கள், சேவைகளின் தேவை மோசமான அளவில் குறைந்ததும், வங்கி அல்லாத நிதிநிறுவனங்கள் சிக்கலில் இருந்தது, கடன் வளர்்ச்சி குறைவு போன்றவை முக்கியக்காரணங்கள்.

 ஆனால் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதம் உயரக்கூடும், அதற்கு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் இது சாத்தியமாகும்.  2020-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதம் உயரக்கூடும், 2021-ம் ஆண்டில் 6.5சதவீதம் அதிரிக்கலாம். இவை அனைத்தும்  நிதி மற்றும் பணக்கொள்கையை எவ்வாறு இந்திய அரசு எவ்வாறு கையாள்கிறது, ஊக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்தும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தும் அமையும். 2020-ம் ஆண்டில் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளான இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ ஆகியவை சராகரிக்கும் குறைவாகவே வளர்்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

click me!