நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு... குற்றவாளிகள் 4 பேரை நாளை தூக்கிலிட தடை..!

By vinoth kumarFirst Published Jan 31, 2020, 6:08 PM IST
Highlights

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதியான (நாளை) தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை நாளை தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.  

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதியான (நாளை) தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

அவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களும், குடியரசுத் தலைவர் அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.

இதற்கிடையே, சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறி வரும் குற்றவாளி பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அந்த புதிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. இதனிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி வினய் குப்தா குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவைடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரே வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரையும் வெவ்வேறு நாளில் தூக்கிலிட முடியாது. ஆகையால், மறு உத்தரவு வரும் வரை நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை நாளை தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

click me!