200 ரயில் நிலையங்களில் வை-பை – ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தகவல்

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
200 ரயில் நிலையங்களில் வை-பை – ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தகவல்

சுருக்கம்

2017-ம் ஆண்டில் 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம் உள்பட 6 ரயில் நிலையங்களில், வை-பை வசதி துவக்க விழா நடந்தது. இதில், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில பொது துறை அமைச்சர் சுதாகரன் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, அமைச்சர் சுரேஷ் பிரபு பேசியதாவது:-

நடப்பு ஆண்டில் மட்டும் 100 ரயில் நிலையங்களில் வை-பை வசதி துவக்கப்பட்டுள்ளது. சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் வை-பை வசதி ஏற்படுத்தும் நோக்கில், 2017ம் ஆண்டில் கூடுதலாக 200 ரயில் நிலையங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.

PREV
click me!

Recommended Stories

Digital Ration Token: ரேஷன் வாங்க இனி டோக்கன் அவசியம்..! இனி மணிக்கணக்குல வெயிட் பண்ண வேண்டாம்
Powerful Women: அதிகாரத்தின் உச்சத்தில் 'அம்மாக்கள்' - இந்தியாவின் 8 சக்திவாய்ந்த பெண் தலைவர்கள்