ஐயயோ.. கொரோனாவுக்கு கொத்து கொத்தாக மடியும் பொதுமக்கள்.. ஜெட் வேகத்தில் உயரும் பாதிப்பால் அதிர்ச்சி..!

By vinoth kumarFirst Published Apr 18, 2021, 11:33 AM IST
Highlights

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் புதிய உச்சமாக 1,501ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் புதிய உச்சமாக 1,501ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  2,61,500 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,88,109ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,501 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,77,150ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 419 பேர், டெல்லியில் 167 பேர், சத்தீஸ்கரில் 158 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,28,09,643 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,38,423 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையில்;- கடந்த 24 மணி நேரத்தில் 15,66,394 பேருக்கு மாதிரிகள் செய்யப்பட்டன.  இதுவரை இந்தியாவில் 26,65,38,416 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!