முதல் முறையாக பாதிப்பு புதிய உச்சம்.. 1038 பேர் பலி.. வேறு வழியில்லாமல் ஊரடங்கை நோக்கி வேகமாக நகரும் இந்தியா?

By vinoth kumarFirst Published Apr 15, 2021, 10:59 AM IST
Highlights

முதல்முறைவாக இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 2வது நாளாக ஆயிரத்தை கடந்துள்ளது. 

முதல்முறைவாக இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 2வது நாளாக ஆயிரத்தை கடந்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. 

Latest Videos

நேற்று ஒரே நாளில் 1,038 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,73,123ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,24,29,564  பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 93,528 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 14,71,877  பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 1,44,93,238 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 13,84,549 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 20 லட்சத்து 03 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதித்த முதல் மூன்று நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், 2வது இடத்தில் இந்தியாவும்,ள பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடித்தக்கது.

click me!