எங்கும் மரண ஓலம்.. பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியதால் கதிகலங்கும் பொதுமக்கள்..!

Published : Apr 14, 2021, 12:23 PM ISTUpdated : Apr 15, 2021, 10:18 AM IST
எங்கும் மரண ஓலம்.. பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியதால் கதிகலங்கும் பொதுமக்கள்..!

சுருக்கம்

இந்தியாவில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1000ஐ தாண்டியுள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் 1,84,372 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 1000ஐ தாண்டியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை  1,72,085 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 82,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 11,11,79,578 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,11,758 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 06 லட்சத்து 18 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!