கடந்த ஓராண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த சைக்கிள், பைக் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் எண்ணிக்கை 42 சதவீதம் கூடியுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் என்ற ஒப்பீட்டு அறிக்கை ஒன்றை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் 2017 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகள் குறித்து புள்ளவிவரங்கள் அலசப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையின்படி 2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்த சைக்கிள், பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் சென்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் பாதசாரிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டைவிட 42 சதவீதம் அதிகம்.
ஆனால், மூன்று சக்கர வாகனங்கள், கார், லாரி ஆகியவற்றில் சென்றுகொண்டிருந்தபோது சாலை விபத்துகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 35, 252 ஆக உள்ளது. இது 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிட, 31 சதவீதம் குறைவு.
சாலை விபத்துகளில் 1.53 லட்சம் மரணங்கள் - மத்திய அரசு தகவல்
சாலை விபத்துகளில் இறப்பவர்கள் எண்ணிக்கை ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளில் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது இதற்கு முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டும் இந்த அறிக்கை, வாகன விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாவும் சுட்டிக்காட்டுகிறது.
சைக்கிள், பைக் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலை விபத்துகளில் இறப்பது 2017ஆம் ஆண்டில் 49.3 சதவீதமாக இருந்தது. 2021ஆம் ஆண்டில் இது 67 சதவீதமாகக் கூடியிருக்கிறது. சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள சைக்கிள், பைக் ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு மேலும் பாதுகாப்பான சாலை அமைப்பை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
ஜம்மு காஷ்மீரில் 186 பயங்கரவாதிகளைத் தீர்த்துக் கட்டிய ஜவான்கள்!