இளம் ஆர்கன் டோனர் என்ற பெருமையை பெற்ற 17 வயது சிறுமி... தந்தைக்கு கல்லீரல் தானம்!!

By Narendran S  |  First Published Feb 19, 2023, 8:04 PM IST

கேரளாவில் தந்தைக்காக தனது ஒரு கல்லீரலை தானம் செய்த 17 வயது சிறுமி இளம் ஆர்கான் டோனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 


கேரளாவில் தந்தைக்காக தனது ஒரு கல்லீரலை தானம் செய்த 17 வயது சிறுமி இளம் ஆர்கான் டோனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கேரளாவை சேர்ந்த பிரதீஷ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்திருக்கிறது. இதை அடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவரது கல்லீரல் அழுகி வருவதாகவும் தெரிவித்தனர். இதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லீரலை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதை அடுத்து அவரது குடும்பத்தினர் கல்லீரல் தானத்திற்கு விண்ணப்பித்தனர். ஆனால் கல்லீரல் தானம் கொடுப்பதாக யாரும் முன்வரவில்லை. இதை அடுத்து அவரது 17 வயது மகள் தேவநாடா, தனது தந்தைக்கு தானே கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார். மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் இவரிடமிருந்து கல்லீரல் பெறப்பட்டால் பிரதீஷுக்கு சரியாக பொருந்தும் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்.. முத்தம் கொடுத்த இளைஞர் - நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை.!

Tap to resize

Latest Videos

எனவே தேவநாடா தனது உடல் எடையை குறைக்க தொடங்கியுள்ளார். மருத்துவர்கள் கூறிய எடை இருந்தால்தான் கல்லீரல் எடுக்க முடியும். எனவே சீரான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கத்தை பின்பற்றி எடையை தேவநாடா குறைத்திருக்கிறார். அதேபோல அறுவை சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் மருத்துவமனை தேவநாடாவின் ஆதார் உள்ளிட்ட ஐடிகளை சேகரித்த போது தேவநாடாவின் வயது 17 என்பது தெரியவந்தது. இந்தியாவில் 18 வயதை கடந்தவர்கள் தான் உடலுறுப்பு தானம் செய்ய முடியும் என்ற விதிமுறை இருக்கும் நிலையில் தேவநாடாவின் குடும்பம் கடைசியாக நீதிமன்றத்தை நாடியது.

இதையும் படிங்க: பிரசவம் முடிந்த சிறிது நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பெண்

இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கப்பட்ட போது, பிரதீஷ் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக இதனை அகற்றவில்லையெனில் இது மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து 17 வயது சிறுமி தேவநாடா தனது தந்தைக்கு உறுப்பு தானம் செய்ய நீதிம்ன்றம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதன் மூலம் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவர் என்கிற பெருமையை தேவநாடா பெற்றுள்ளார். தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். 

click me!