ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக அடித்துக் கொள்ளப்பட்ட 17 வயது சிறுமி... கொரூர தாத்தா கைது..!

Published : Jul 22, 2021, 04:53 PM IST
ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததற்காக அடித்துக் கொள்ளப்பட்ட 17 வயது சிறுமி... கொரூர தாத்தா கைது..!

சுருக்கம்

லூதியானாவில் இருந்தபோது தங்களது மகளுக்கு மாடர்ன் ஆடைகளை வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தி உள்ளனர்.  இந்நிலையில் ஊருக்குத் திரும்பிய பின்னும் ஜீன்ஸ் பேண்ட், டாப்ஸ் என மாடர்ன் உடைகளை அணிந்து வந்திருக்கிறார் அந்த இளம்பெண். 

ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமியை சொந்த தாத்தாவும், மாமாவும் அடித்துக் கொன்று பாலத்தில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், தியோரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். வேலைக்காக பஞ்சாப் மாநிலம் லூதியானாவுக்கு மனைவி மற்றும் 17 வயது மகளையும் அழைத்துச்சென்றார். லூதியானாவில் வாசித்து வந்த அவர்கள் பல மாதங்கள் கழித்து அவரது மனைவியையும் 17 வயது மகளையும் சொந்த ஊருக்குத் திரும்பி அனுப்பியுள்ளார்.

லூதியானாவில் இருந்தபோது தங்களது மகளுக்கு மாடர்ன் ஆடைகளை வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தி உள்ளனர்.  இந்நிலையில் ஊருக்குத் திரும்பிய பின்னும் ஜீன்ஸ் பேண்ட், டாப்ஸ் என மாடர்ன் உடைகளை அணிந்து வந்திருக்கிறார் அந்த இளம்பெண். இது அவர்களது உறவினர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தங்களது கிராமத்தில் உள்ளவர்கள் அணியும் உடைகளை அணியுமாறு வற்புறுத்தி உள்ளனர். ஆனால், சிறுமி அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த உடை பிரச்னை மீண்டும் எழுந்திருக்கிறது. சிறுமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தாத்தாவும். மாமாவும், சிறுமியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் சுவரில் மோதி சிறுமியின், மண்டை உடைந்தது, சரமாரியாக அடித்துக் கொன்ற அவர் உடலை, ஆட்டோவில் தூக்கி சென்றனர். பின்னர், காஸ்யா – பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள படன்வா பாலத்தில் வீசினார்.

ஆனால், சிறுமியில் உடல் பாலத்திலேயே தொங்கியது. இதுபற்றி அந்தப் பக்கம் சென்றவர்கள் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தாத்தாவை கைது செய்துள்ளனர். சிறுமியின் மாமா தலைமறைவாகி விட்டார். 

PREV
click me!

Recommended Stories

Rs 12000 Scholarship: 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.12,000; இந்த அரசு ஸ்காலர்ஷிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?
Diwali Train Ticket Booking Opening: தீபாவளிக்கு ரயில்ல ஊருக்கு போறீங்களா?! முன்பதிவு தொடங்க போகுது.! மறந்துடாதீங்க.!