
2022 ஆம் ஆண்டின் வங்கிகளுக்கான வருடாந்திர விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. RBI அறிவிப்பின் படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வருடந்தோறும் தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கான வருடாந்திர விடுமுறை பட்டியலை வெளியிடும். அதேபோல் அடுத்த ஆண்டிற்குரிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஜனவரி மாதம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் பொது பண்டிகை மற்றும் அரசு விடுமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐந்து ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன.
மேலும் கூடுதலாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படுவதால் மொத்தமாக வங்கிகளுக்கு வார இறுதி விடுமுறை 7 நாட்களாக உள்ளது. RBI வெளியிட்டுள்ள பட்டியலில் மொத்தம் 9 நாட்கள் உடன் சேர்த்து இந்த வார இறுதி விடுமுறைகளையும் சேர்த்து 7 நாட்களுக்கும் விடுமுறை என்று தெரிவித்துள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை வருகிற ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு முதல் தொடங்கவுள்ளது.
ஜனவரி 1 : ஆங்கிலப் புத்தாண்டு (நாடு முழுவதும் விடுமுறை) ஜனவரி 2 : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4: லோசூங் (சிக்கிம்), ஜனவரி 8: இரண்டாவது சனிக்கிழமை, ஜனவரி 9 : ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 11: மிஷனரி தினம் (மிஜோரம்), ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் (கொல்கத்தா), ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல், ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் (புதுச்சேரி, ஆந்திரா, தமிழ்நாடு), ஜனவரி 16 : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 18: தைப்பூசம் (சென்னை), ஜனவரி 22: நான்காவது சனிக்கிழமை, ஜனவரி 23 : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26: குடியரசு தினம் (நாடு முழுவதும்), ஜனவரி 30 : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 2022 இல், RBIஆல் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 9 விடுமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிறு கூட்டினால் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை 16 ஆகிவிடும். தமிழகத்தில் மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். மேலும், இந்த விடுமுறை அனைத்து மாநில வங்கிகளுக்கும் பொருந்தாது என்று RBI அறிவித்துள்ளது.