
தொடக்கல்வி தகுதித் தேர்வு கட்டாயம்... 15 லட்சம் பயிற்சிபெறாத ஆசிரியர்கள் “தொடக்ககல்வி டிப்ளமோ” படிப்புக்கு பதிவு!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், தொடக்க கல்விக்கான பட்டயப்படிப்பை முடித்தால் தான் பணியில் தொடர முடியும் என்ற மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து 15 லட்சம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனத்தில் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.
நாட்டில் உள்ள பயிற்சி பெறாத ஆசிரியர்களில் 75 சதவீதம் பேர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர் என மத்திய அரசு புள்ளிவிவரம் .
மேலும், அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 3.53 லட்சம் பயிற்சி பெறாத ஆசிரியர்களும் தொடக்ககல்வி பட்டயப்படிப்புக்காக விண்ணப்பித்து உள்ளனர், மற்றவர்கள் அனைவரும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களாவர்.
இந்த புள்ளிவிவரங்கள்படி, பீகாரில் அதிகபட்சமாக 2.85 பயிற்சி பெறாத ஆசிரியர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் 1.95 லட்சம் ஆசிரியர்கள், மத்தியப் பிரதேசம் 1.91 லட்சம், குஜராத்தில் 1.71 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்விக்கான பயிற்சி நிறுவனத்தில்(NIOS) 4 ஆயிரத்து 603 பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தொடக்கல்வி பட்டயப்படிப்புக்காக(D.EI.ED)5 விண்ணப்பித்துள்ளனர்.
18 மாதங்கள் படிக்கும், தொடக்க கல்விக்கான பட்டியப்படிப்பை மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த படிப்பில் சேர இதுவரை 15 லட்சம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் விண்ணப்பித்து பதிவு செய்துள்ளனர்.
ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் இந்த படிப்பில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி செய்ய தகுதியானவர்கள். அவ்வாறு இந்த தொடக்கல்வி பட்டயப்படிப்பை முடிக்காத ஆசியர்கள் தங்கள் பணியை இழப்பார்கள் என்றும், 2019ம்ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த பட்டயப்படிப்பை முடித்து இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தின்படி, அனைத்து ஆசிரியர்களும் தொடக்கல்விக்கான பட்டியப்படிப்பை முடித்து இருத்தல் கட்டமாயமாகும்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்வியில் 2015 மார்ச் 31ந்தேதி வரை நாட்டில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடிக்காமல் ஆசிரியர்களாக பணியாற்றிவருவதாக தெரியவந்தது.
கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில், பயிற்சி படிப்பை முடிக்காதவர்கள் தகுதியற்றவர்கள் ஆவர். இது தொடர்பாக சமீபத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசு 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் குறைந்தபட்சம் இந்த தொடக்கல்வி பட்டியப்படிப்பை முடித்து இருத்தல் அவசியமாகும்.
தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்விக்கான பயிற்சி நிறுவனம் மூலம், “ஸ்வயம் பிரபா கல்வி சேனல் மூலம் இந்த படிப்பு நடத்தப்படுகிறது. ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.