
2018ம் ஆண்டு, மே மாதம் 5-ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு மேற்கொள்ளும் பயணத்துக்கு 1.30 லட்சம் இந்தியர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர் என ‘நாசா’ சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசா, சிவப்பு கோள் என்று அழைக்கப்படும் ‘செவ்வாய் கிரகத்துக்கு’ (மார்ஸ்) 2018ம் ஆண்டு மே 5 ந்தேதி ‘நாசா இன்சைட்’ எனும் செயற்கைக்கோளை செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ஆன்-லைன் மூலம் போர்டிங் பாஸ்களையும் வழங்க உள்ளது.
இந்த பயணத்தில் பங்கேற்பவர்களின் பெயர்கள் ஒரு சிலிக்கான் மைக்ரோ சிப்பில் எழுதப்பட்டு, தலைமுடியின் கனத்தைக் காட்டிலும் குறைவாக எழுதப்பட்டு, பயணிப்பவரின் தலைப்பகுதியில் இணைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பங்கேற்று செவ்வாய் கிரகம் செல்வதற்காக உலகம் முழுவதிலும் 24 லட்சத்து 29 ஆயிரத்து 807 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் அமெரிக்காவில் இருந்து 6 லட்சத்து 76 ஆயிரத்து 773 பேரும், சீனாவில் இருந்து 2 லட்சத்து 62 ஆயிரத்து 752 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். 3-வது இடத்தில் இந்தியர்கள் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 899 பேர் டிக்கெட்முன்பதிவு செய்துள்ளனர் என நாசா தெரிவித்துள்ளது.