கார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி..!

Published : Mar 14, 2020, 05:13 PM IST
கார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! புதுமண தம்பதி உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாப பலி..!

சுருக்கம்

எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோரவிபத்தில் கார் அப்பளம் போல நொருங்கவே அதில் பயணம் செய்த புதுமண தம்பதிகள், மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கும் சீதா என்கிற பெண்ணிற்கும் அண்மையில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதியினருடன் குடும்பத்தினர் அனைவரும் ஜோத்பூர் நகர் அருகே இருக்கும் பாபா ராம்டியோ ஆலயத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையின் எதிரெ லாரி ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த கோரவிபத்தில் கார் அப்பளம் போல நொருங்கவே அதில் பயணம் செய்த புதுமண தம்பதிகள், மற்றும் குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போரடினர். அவர்களை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து வந்த காவலர்கள் பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானத்தின் அதிரடி திட்டம்..!

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!