திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானத்தின் அதிரடி திட்டம்..!

By Manikandan S R S  |  First Published Mar 14, 2020, 12:04 PM IST


திருப்பதியில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில்மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் 5 வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு இலவச தரிசனம் வழங்கப்பட இருக்கிறது.


ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனத்திற்கு வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் காணிக்கையாக நகை, பணம் என ஏராளமாக உண்டியலில் செலுத்துகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மாதம்தோறும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் 5 வயது குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு குறிப்பிட்ட இரண்டு நாட்களில் இலவச தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த மாதத்திற்கான இலவச தரிசன சேவை  17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 17ம் தேதி மூத்த குடிமக்களுக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தரிசனம் கொடுக்கப்படவுள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேருக்கும், மதியம் 2 மணிக்கு இரண்டாயிரம் நபர்களுக்கும், மாலை 4 மணியளவில் ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 4 ஆயிரம் பக்தர்கள் அன்று இலவச தரிசன சேவையை பெறுகிறார்கள்.

தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல்,டீசல் விலை..! வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி..!

18ம் தேதி அன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு ’சுபதம்’ வழியாக இலவச தரிசனம் வழங்கப்படுகிறது. அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1.30 மணி வரை இந்த தரிசனம் வழங்கப்படவுள்ளது. தேவஸ்தானம் வழங்கும் இந்த சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து..! 6 பேர் உடல்நசுங்கி பரிதாப பலி..!

click me!