‘விவசாயம்தான் கடவுள், யாரும் தேவையில்லை’...உற்சாகமாக நிலத்தில் உழைக்கும் ‘109 வயது இளைஞர்’

 
Published : Jan 16, 2018, 05:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
‘விவசாயம்தான் கடவுள், யாரும் தேவையில்லை’...உற்சாகமாக நிலத்தில் உழைக்கும் ‘109 வயது இளைஞர்’

சுருக்கம்

109 age old farmer working in his field till now

விவசாயிகளின் நிலை பல்வேறு மாநிலங்களில் பரிதாபத்துக்குரியதாகி வரும் நிலையில், “விவசாயம்தான் கடவுள், வேறுயாரும் தேவையில்லை’’ எனக்கூறி உழவுத் தொழிலை கைவிடாமல் செய்து வருகிறார் 107வயது முதியவர்.

விசாயத்தை கைவிட நினைப்பவர்கள் அனைவருக்கும் பாடமாக, உதாரணமாக திகழ்கிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 109 வயது இளைஞர் பகவந்த் நீலு பத்தி. உத்தரகன்னட மாவட்டம், அங்கோலா தாலுகாவில் உள்ள அவர்சா கிராமத்தைச் சேர்ந்தவர்தான் பகவந்த் நீலு பத்தி.

இவரின் உழைப்பை நேரடியாகப் பார்ப்பவர்களுக்கு 109 வயது யாரும் சொல்லிவிட முடியாது, அவரை 109 வயது இளைஞர் என்றுதான் அழைக்க வேண்டும்.

109 வயது ஆகியபோதிலும், அதிகாலையில் 5 மணிக்கு எழும் பகவந்த், வயலுக்கு 6 மணிக்கு வந்து தனது விவசாயப் பணிகளை தொடங்கி விடுகிறார். மாலையில் சூரியன் மறையும் வரை தொடர்ந்து அயராது வேலைகளைச் செய்து வருகிறார்.

தனக்கு இருக்கும் 3 ஏக்கர் நிலத்தில் சிறிது இடத்தில் நெற்பயிரையும், உருளைக்கிழங்கு, நிலக்கடலை,காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு உள்ளூர் சந்தையிலேயே விற்பனை செய்து வருகிறார். இந்த நவீன காலத்திலும் டிராக்டர் உள்ளிட்ட நவீன உழவு கருவிகளை பயன்படுத்தாமல் மாடுகளை வைத்தே நிலத்தை உழுது பாரம்பரிய முறைப்படி பகவந்த் நீலு விவசாயம் செய்து வருகிறார். இவரின் உழைப்பும், பாரம்பரிய முறைகளும் எதிர்கால சந்ததியினருக்கும், விவசாயத்தை உயிர்ப்புடன் வைக்க விரும்புவர்களுக்கும் சிறந்த படிப்பினையாக இருக்கும்.

தனது அனுபவம் குறித்து பகவந்த் நீலு கூறுகையில், “ யார் சொன்னது 109 வயது முதியவர் என்று நான் 109 வயது இளைஞர். நான் இன்னும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன், கண்ணாடி இல்லாமல் கூட பார்க்க முடியும். ஆனால், சிலர் சத்தமாக பேசினால் மட்டுமே என்னால் கேட்க முடியும்.

எனது தந்தை ஒரு விவசாயி. அவர்  இறந்தபின் அந்த 3 ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை தொடங்கினேன். சிறுவயதிலையே எனக்கு திருமணம் நடந்துவிட்டது. 12 குழந்தைகள் பிறந்தனர். அதில் 3 மகன்கள் இறந்துவிட்டனர். 5 மகள்கள், 4 மகன்கள் இருந்தனர். அதில் சமீபத்தில் 2 மகன்கள் இறந்துவிட்டனர். இப்போது இருக்கும் எனது பிள்ளைகள் யாவரும் 75 முதல் 80 வயதுக்குள் இருக்கிறார்கள். எனக்கு கொள்ளு பேரன்கள், எள்ளு பேரன்களும் இருக்கிறார்கள்.

எனது பூர்வீக ஊரைவிட்டு, ஹெபுல்லா கிராமத்தில் எனது மகள்களுடன் வசிக்கிறேன். எனது விவசாய பணிகளுக்கு எனது 95 வயது மனைவி ஆனந்தி உதவி செய்துவருகிறார். எனக்கு பிறகு இந்த விவசாயத்தை யாரும் பார்க்கமாட்டார்கள் என்பதால் உயிரோடு இருக்கும் வரை தொடர்ந்து விவசாயம் செய்வேன். விவசாயம்தான் எனக்கு கடவுள். வேறுயாரும் தேவையில்லை’’ எனத் தெரிவித்தார்.

பகவந்த் நீலுவின் உறவினர் மகேஷ் நாயக் கூறுகையில், “ 109 வயதானாலும் பகவந்த் இன்னும் இயற்கை உணவுகளையும், பாரம்பரிய தானியஉணவுகளையும் விரும்பி சாப்பிடுகிறார். கடவுள் கொடுத்த பரிசுதான் பகவந்த். கிராமத்தை சமீபத்தில் சுத்தம் செய்யும் பணிக்கு உடன் வந்திருந்து தன்னால் முடிந்த பணிகளை பகவந்த் செய்தார். இந்த வயதிலும் கடினமாக உழைத்து சாப்பிடும் பகவந்த் குடிசை வீட்டில்தான் வசித்து வந்தார். மழைகாலம் வந்துவிட்டால் அவரின் நிலை பரிதாபமாக இருந்தது. இதைப் பார்த்த கிராமபஞ்சாயத்து, அவரின் விவசாய நிலத்தில் ஒரு பகுதியில் சொந்தமாக வீடு கட்டிக்கொடுத்து இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இஸ்ரோவின் 'பாகுபலி' ராக்கெட் சாதனை! வெயிட்டான சாட்டிலைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
ரூ.1 லட்சத்துக்கு காண்டம், ரூ.4 லட்சத்துக்கு நூடுல்ஸ்.. 2025ல் இந்தியர்கள் செய்த வினோத ஆர்டர்கள்!