அவசர அவசரமாக விரைந்த100 கம்பெனி துணை ராணுவ படை..! ஸ்ரீநகரில் பதற்றம்.. !

By ezhil mozhiFirst Published Feb 23, 2019, 1:55 PM IST
Highlights

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போது ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு,100 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

அவசர அவசரமாக விரைந்த100 கம்பெனி துணை ராணுவ படை.. ஸ்ரீநகரில் பதற்றம்.. !

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தற்போது ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு,100 கம்பெனி துணை ராணுவப் படையினரை அனுப்பி  வைக்கப்பட்டு உள்ளது. 

நேற்றிரவு பிரிவினை வாத தலைவர் யாசின் மாலிக் என்பவரை  டெல்லியில் கைது செய்யப்பட்டான். இதனை தொடர்ந்து எழுந்துள்ள பதற்றம் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அம்மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக அவசரமாக துணை ராணுவப் படையினரை அங்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை அடுத்து 100க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவப் படையினர் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கம்பெனி என்பது,80  முதல் 150  வீரர்களை கொண்ட குழுக்கள்  என்பதால், மொத்தம் பத்தாயிரம் வீரர்கள் ஸ்ரீ நகருக்கு அனுப்பி  வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
click me!