பாகிஸ்தானியர்களுக்கு 48 மணிநேரம் கெடு... இந்தியா அதிரடி உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Feb 20, 2019, 1:55 PM IST
Highlights

48 மணிநேரத்திற்குள் இந்திய எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தானியர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது. 

48 மணிநேரத்திற்குள் இந்திய எல்லையை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தானியர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது. 

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 49 பேர் பலியானது இந்திய இதயங்களை உலுக்கி எடுத்தது. அந்த சோகம் பலரது மனங்களை விட்டு இன்னும் நீங்கவே இல்லை. இதற்கு பாகிஸ்தான் மீது பதிலடி கொடுக்க வேண்டும் என இந்தியா திட்டமிட்டு வருகிறது. பதிலடி கொடுத்தால் திருப்பியடிக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிரடியாக கூடியதால் இரு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. 
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறும்படி அந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தானில், பாக்., எல்லைக்கு அருகில் உள்ள பிகானிர் மாவட்டத்தில், வர்த்தகம், தொழில் மற்றும் சிகிச்சைக்காக ஏராளமான பாகிஸ்தானியர்கள் வந்து செல்கின்றனர்.

 

இது குறித்து, கலெக்டர் குமார் பால் கவுதம் பிறப்பித்துள்ள உத்தரவில், ’’எல்லைக்கு அருகில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள், அடுத்த, 48 மணி நேரத்தில், மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும். எல்லை பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தர்மசாலாக்கள் மற்றும் மருத்துவமனைகளில், பாகிஸ்தானியர்கள் தங்கவும் தடை விதிக்கப்படுகிறது. இந்தியர்கள், பாகிஸ்தான் நாட்டவர்களுடன் வர்த்தக ரீதியான கொடுக்கல், வாங்கலில் ஈடுபடக்கூடாது.

அவர்களை பணியமர்த்தவும் கூடாது. இந்த தடை உத்தரவு, இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும்’’ என அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவிற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

click me!