
Assam Rifles Operation : மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்திய-மியான்மர் எல்லையை ஒட்டிய சண்டேல் மாவட்டத்தில் உள்ள கெங்ஜாய் தெஹ்ஸிலில் உள்ள புதிய சாம்டல் கிராமத்திற்கு அருகில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடமாடுவது குறித்து உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஸ்பியர் கார்ப்ஸ் கீழ் அசாம் ரைபிள்ஸ் பிரிவு மே 14ந் தேதி அன்று தேடுதல் வேட்டையை தொடங்கியதாக ராணுவத்தின் கிழக்கு கட்டளைப்பிரிவு X பதிவில் தெரிவித்துள்ளது."
<br>"இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு அசாம் ரைபிள்ஸ் படையினர் விரைவாக பதிலடி கொடுத்தனர். இதில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கணிசமான அளவு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன. தேடுதல் வேட்டை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது...," என்று கூறப்பட்டுள்ளது.</p>