BLACK MONEY மூடி மறைப்பு – 10 கிராம் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு வாங்கும் பண முதலைகள்

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 01:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
BLACK MONEY மூடி மறைப்பு – 10 கிராம் தங்கம் ரூ.70 ஆயிரத்துக்கு வாங்கும் பண முதலைகள்

சுருக்கம்

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்வதாக பரபரப்பு தகவல்கள் வந்துள்ளன. அதில் 10 கிராம் தங்கத்தை ரூ.70 ஆயிரம் வரை கொடுத்து, நகை வாங்குவது தெரியவந்துள்ளது.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அவற்றை 10ந் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தார். இதை தொடர்ந்து, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வைத்து இருந்தவர்கள், நேற்று வங்கிகளுக்கு சென்று அவற்றை கொடுத்துவிட்டு வேறு ரூபாய் நோட்டுகளை வாங்க தொடங்கினர்.

ஆனால், கணக்கில் காட்டாமல் அதிகளவில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள், தங்களிடம் உள்ள அத்தனை 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளையும் வங்கியில் கொடுத்து மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் மத்திய அரசு, வருமான அளவை மீறி பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு வரியுடன் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. இதனால் அதிகளவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்துள்ளவர்கள், அந்த பணத்தை எப்படி மாற்றுவது என தெரியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

சில வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள், பண பறிமாற்றம் செய்பவர்கள், ஹவாலா மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை முறைகேடான வழியில் தள்ளுபடி விலையில் மற்றவர்களிடம் கொடுத்து அவற்றுக்கு பதிலாக வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதாவது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மற்றவர்களிடம் விலைபேசி விற்று, அப்படி கொடுத்த தொகைக்கு மிகக்குறைவான தொகையை அவர்களிடம் இருந்த பெற்று கொள்வதாக தகவல் கிடைத்தது.

இதன்மூலம், கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவதில் அவர்களுக்கு பெரியளவில் இழப்பு எதுவும் இல்லாமல் போய்விடும். மேலும் அந்த ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து அவற்றுக்கு சமமான வேறு ரூபாய் நோட்டுகளை வாங்கி கொள்ள முடியும்.

இதுபோன்ற சட்டவிரோத முறைகேடு நடப்பதாக, வருமான வரித்துறையினருக்கு கிடைத்த தகவலால், டெல்லியில் கரோல் பாக், தரிபா கலான், சாந்தினி சவுக் ஆகிய இடங்களிலும், மும்பையில் 3 இடங்களிலும், சண்டிகார், லூதியானா நகரங்களில் சில இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

டெல்லி சாந்தினி சவுக்கில் சில இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியதும், அந்த பகுதியில் உள்ள 90 சதவீத கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.

தென் இந்தியாவில் உள்ள இரு நகரங்களிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் போது சில இடங்களில் முக்கிய ஆவணங்களை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நடவடிக்கையில் 10 கிராம் தங்கம் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்பட்டதும் சோதனையின் போது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

அதாவது கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் 10 கிராம் தங்கத்தை ரூ.30 ஆயிரம் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக ரூ.55 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை கொடுத்து தங்களிடம் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றியது சோதனையின் போது தெரிய வந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த சோதனை தொடர்ந்து நீடிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நோ டென்ஷன்! பயம் வேண்டாம்! வீட்டு சிலிண்டர் விநியோகத்தில் கவலை இனி இல்லை! மத்திய மாநில அரசுகளின் 'மாஸ்' அப்டேட்!
மீண்டும் ஒரு "லாக்டவுன்"! சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடப்படும் ஹோட்டல்கள்.! உலகையே பதற வைக்கும் அமெரிக்கா