பூட்டை உருவாக்க சுமார் 2 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தனது கனவுத் திட்டத்தை நனவாக்குவதற்காக சத்ய பிரகாஷ் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பயன்படுத்தி இருக்கிறார்.
அயோத்தி ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரியில் பக்தர்களின் தரிசனத்துக்காகத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அலிகாரைச் சேர்ந்த வயதான கைவினைஞர் ஒருவர், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு 400 கிலோ பூட்டை உருவாக்கியுள்ளார்.
அலிகார் நகரம் கையால் செய்யப்பட்ட பூட்டுகளுக்கு பெயர் பெற்றது. அந்நகரைச் சேர்ந்த ராமரின் தீவிர பக்தரான சத்ய பிரகாஷ் ஷர்மா பல மாதங்களாக உழைத்து உலகின் மிகப்பெரிய கையால் செய்யப்பட்ட பூட்டை அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளார்.
ஏராளமான பக்தர்களிடம் இருந்து காணிக்கைகளைப் பெற்றுவருவதாகக் கூறும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள், சத்ய பிரகாஷ் அளிக்கும் பூட்டை எங்கு பயன்படுத்தலாம் என்று பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
'தாலா நாக்ரி' அல்லது பூட்டுகளின் தேசம் என்று அழைக்கப்படும் அலிகாரில் சத்ய பிரகாஷ் சர்மாவின் குடும்பம் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்கள் நூற்றாண்டுக்கும் மேலாக கைகளால் பூட்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் சொல்கிறார்.
வீட்டு வாசலில் நிறுத்தும்போது வெடித்துச் சிதறிய கார்... காருக்குள் இருந்த இளைஞர் பரிதாப பலி
ராமர் கோவிலை மனதில் வைத்து 10 அடி உயரம், 4.5 அடி அகலம், 9.5 அங்குல தடிமன் கொண்ட ராட்சத பூட்டை தயாரித்துள்ள அவர் நான்கு அடி உயர சாவியையும் உருவாக்கியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த வருடாந்திர அலிகார் கண்காட்சியில் இந்தப் பூட்டு காட்சிப்படுத்தப்பட்டது. அயோத்தி கோயிலுக்காகத் தயாரித்துள்ள இந்தப் பூட்டில் இன்னும் சில சிறிய மாற்றங்கள் மற்றும் அலங்காரங்களைச் செய்துவருகிறார் சத்ய பிரகாஷ் சர்மா.
இந்தக் கடினமான முயற்சியில் எனது மனைவி ருக்மணியும் தனக்கு உதவியதாகவும் அவர் தெரிவிக்கிறார். "முன்பு நாங்கள் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பூட்டை உருவாக்கியிருந்தோம். ஆனால் சிலர் பெரிய பூட்டை உருவாக்க பரிந்துரைத்ததால் நாங்கள் அதைச் செய்யத் தொடங்கினோம்" என்று ருக்மணி சொல்கிறார்.
இப்போது பூட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பூட்டை உருவாக்க சுமார் 2 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தனது கனவுத் திட்டத்தை நனவாக்குவதற்காக சத்ய பிரகாஷ் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் பயன்படுத்தி இருக்கிறார்.
“எங்கள் ஊர் பூட்டுக்கு பெயர் போனது. ஆனால், இதுவரை யாரும் இப்படிச் செய்யாததால், கோயிலுக்காக இந்த ராட்சதப் பூட்டைத் தயாரிக்க நினைத்தேன்" என்று சர்மா கூறுகிறார்.
இதற்கிடையில், கோயில் அறக்கட்டளை அடுத்த ஆண்டு ஜனவரி 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளது எனவும் அதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் எனவும் ராம் மந்திர் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நிலவைப் படம்பிடித்த சந்திரயான்-3! முதல் காட்சிகளை வெளியிட்டது இஸ்ரோ!