சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்பிக்களும் தங்கள் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்
ராஜஸ்தான் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் தங்கள் எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர். சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற 12 எம்.பி.க்களில் 10 பேர் பிரதமர் மோடி மற்றும் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ராஜினாமா செய்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், ரித்தி பதக், ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகியோர் எம்.பி. ராஜ்யவர்தன் ரத்தோர், ராஜஸ்தானை சேர்ந்த தியா குமார் மற்றும் சத்தீஸ்கரை சேர்ந்த அருண் சாவ் ஆனின் கோமதி சாய் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். இவர்களில் தோமர், படேல், சிங் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் கிரோரி லால் மீனாவும் இந்த ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவரிடம் சமர்ப்பித்தார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் அகற்றி காங்கிரஸ் ஆட்சியை கைபற்றி உள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அதே போல் மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணியை அகற்றி எதிர்க்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து அக்கட்சி தலைவர் லால்துஹோமா மிசோரம் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
எனினும் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் புதிய முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில், வசுந்தரா ராஜே, தியா குமாரி மற்றும் பாபா பாலக்நாத் ஆகிய 3 பேரில் ஒருவர் முதலமைச்சராவார் என்று கூறப்படுகிறது.
சத்தீஸ்கரில், மூத்த தலைவர் ராமன் சிங், முதல்வர் பதவிக்கு வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார். இதேபோல், மத்திய பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ஐந்தாவது முறையாக மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.