மணிப்பூருக்கு நான் கேரண்டி! அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தில்லான அறிவிப்பு

By SG Balan  |  First Published Jul 1, 2023, 6:47 PM IST

வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தில் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் அமைதி திரும்பும் என்று அசாம் முதல்வர் கூறியுள்ளார்.


அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் நிலைமை வேகமாக முன்னேறி வருவதாகவும், அடுத்த வாரம் அல்லது 10 நாட்களில் நிலைமை மேலும் மேம்படும் என்றும் கூறியுள்ளார்.

காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், வடகிழக்கு மாநிலத்தில் ஓரளவு அமைதி நிலைநாட்டப்பட்ட நிலையில், "காங்கிரஸ் கட்சி அழுகிறது, ஆனால் இன மோதல் உச்சக்கட்டத்தின் போது அமைதியாக இருந்தது" என்று குறை கூறினார்.

Tap to resize

Latest Videos

"மணிப்பூரில் ஓரளவு அமைதி திரும்பிவிட்டது. இப்போது காங்கிரஸ் மணிப்பூரைப் பற்றிக் கதறி அழுகிறது. அவர்கள் மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவியபோது அழுதிருக்க வேண்டும். அப்போது மணிப்பூருக்குச் செல்லவில்லை, அதைப் பற்றி கருத்துச் சொல்லவில்லை. இப்போது மணிப்பூர் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது” என்று சர்மா கூறி இருக்கிறார்.

மனிதாபிமானம் செத்துருச்சு! தூங்கும் பயணிகளை தண்ணீரைக் கொட்டி எழுப்பும் ரயில்வே போலீஸ்!

மாநிலத்தின் நிலைமை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட சிறப்பாக உள்ளது என்றும், உள்துறை அமைச்சகமும் மணிப்பூர் அரசாங்கமும் அமைதியை நோக்கிச் செயல்படுகின்றன என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

"மணிப்பூர் நிலைமையில் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது முன்னேற்றம் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உத்தரவாதத்துடன் கூற முடியும்... நிலைமை வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது" என்று அவர் கூறினார்.

நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பாஜகவின் முக்கியத் தலைவராகக் கருதப்படும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்று திரும்பிய மறுநாள் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிப் பேசியுள்ளார்.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை கிண்டல் செய்தார். சமூகங்களில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை தீவிரமாக எடுத்துரைப்பதற்குப் பதிலாக, மக்கள் அவதிப்படும் இடங்களுக்குச் செல்வதாக அமைச்சர் சந்திரசேகர் குற்றம் சாட்டினார்.

ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 12 சதவீதம் உயர்வு! ரூ.1.61 லட்சம் வசூல்!

click me!