புனே ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் மீது ரயில்வே போலீசார் தண்ணீரைத் தெளித்து எழுப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
புனே ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில்வே போலீஸ் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றி எழுப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் வெள்ளிக்கிழமை ரூபன் சவுத்ரி என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
ரயில் நிலைய நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில்வே காவலர் ஒருவர் தண்ணீர் தெளிப்பதை வீடியோவில் காண முடிகிறது. "மனிதாபிமானம் செத்துவிட்டது. புனே ரயில் நிலையத்தில்" என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ரூபன் சவுத்ரி.
ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு
RIP Humanity 🥺🥺
Pune Railway Station pic.twitter.com/M9VwSNH0zn
இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து பல சமூக ஊடக பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது புனேவின் மண்டல ரயில்வே மேலாளர் இந்து துபேயின் கவனத்துக்கும் சென்றுள்ளது. அவர், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
"பிளாட்ஃபார்மில் தூங்குவது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதற்காக பயணிகளுக்கு ஆலோசனை வழங்காமல், அவர்களை இப்படி நடத்துவது சரியான வழி அல்ல" என்றும் துபே கூறியுள்ளார். மேலும். பயணிகளை கண்ணியத்துடன் நடத்துமாறும் சம்பந்தப்பட்ட ரயில் நிலைய காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 11,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சிலர் சம்பவத்தை இந்தச் சம்பவம் "வெட்கக்கேடானது" என்று விமர்சித்துள்ளனர். இன்னும் சிலர் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக போதுமான அளவு காத்திருப்பு அறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
"அதிக காத்திருப்பு அறைகளை இருக்க வேண்டும். அங்கு இடம் இருந்தால், யாரும் பிளாட்பாரங்களில் தூங்க வேண்டியதில்லை. அதேபோல ரயில்களும் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டும்" என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.
பற்றி எரியும் பிரான்ஸ்; கட்டுக்கடங்காத கலவரம்; அதிர வைக்கும் பின்னணி!!