உச்சபட்ச அதிகாரம் கொண்ட பாஜக நாடாளுமன்ற வாரியத்தில் இருந்து இரண்டு முக்கியப் புள்ளிகள் நீக்கம்!!

Published : Aug 17, 2022, 02:14 PM ISTUpdated : Aug 17, 2022, 03:53 PM IST
உச்சபட்ச அதிகாரம் கொண்ட பாஜக நாடாளுமன்ற வாரியத்தில் இருந்து இரண்டு முக்கியப் புள்ளிகள் நீக்கம்!!

சுருக்கம்

பாஜகவின் உயர்மட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் நாடாளுமன்ற வாரியத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நீக்கம்.

பாஜகவின் உயர்மட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் நாடாளுமன்ற வாரியத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இது பாஜக வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரியம்தான் பாஜகவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட வாரியமாக கருதப்படுகிறது. இந்த வாரியத்தில் தற்போது, நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக இக்பால் சிங் லால்புரா, சத்யநாராயணன் ஜதியா, கே. லட்சுமணன், பிஎஸ் எடியூரப்பா, சர்பானந்தா சொனோவால், சுதா யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும், பாஜக மத்திய தேர்தல் கமிட்டியில் இருந்து ஷாநவாஸ் ஹுசைன் நீக்கப்பட்டு, தேவேந்திர பட்னவிஸ், ஓம் மதுர், புபேந்தர் யாதவ் , பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு வேட்பாளருமான வானதி சீனிவாசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

rahul: bilkis bano : பிரதமர் ஜி! உங்க பேச்சையும், செயலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது: ராகுல் காந்தி தாக்கு

இந்த முறை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

governor of kerala: கேரள ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் சட்டத்திருத்தம்: பினராயி விஜயன் அமைச்சரவை ஒப்புதல்

பாஜக தேசிய செயல் அமைப்பு சார்பில் அன்றாடம் எடுக்கும் முடிவுகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்ற வாரியம். இந்த வாரியத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா , மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதை இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆழ்கடலுக்குள் தேசிய கொடிக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை; புதுவையில் அசத்தல்
விஸ்வரூபம் எடுக்கும் நம் சுதந்திர இந்தியா - சிறப்பு பார்வை!