india at 75: அந்நிய மண்ணில் முதல் முறை.. தேசிய கொடி ஏற்றி சாதித்த மேடம் காமா...!

By Kevin Kaarki  |  First Published Jun 20, 2022, 10:30 PM IST

பாம்பேயில் ஃபைன் மற்றும் பிளேகு நோய் தாக்கிய போது தன்னார்வலராக பணியாற்றினார். மேடம் காமாவுக்கும் பிளேகு நோய் தொற்று ஏற்பட்டது.


டாடா, கோத்ரெஜ், வாதியா.. சுதந்திரத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்தே இந்த பார்சி குடும்பத்தினர் தான் இந்திய துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தியாவில் இருந்து பெர்சியாவுக்கு குடி பெயர்ந்த சொராஸ்ட்ரியன் பிரிவினரின் குடும்ப உறுப்பினர்களில் பலர் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களாக உள்ளனர். இவர்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவரும், லண்டனில் இந்திய சுதந்திர பேச்சாளருமான தாதாபாய் நௌரோஜி, வெளிநாட்டு மன்னில் முதல் முறையாக இந்திய தேசிய கொடியை ஏற்றிய மேடம் காமா மற்றும் மகாத்மா காந்தியுடன் தண்டி யாத்திரை சென்ற மிதுபென் ஹோம்சுஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

பிக்காஜி ரஸ்டம் காமா அல்லது மேடம் காமா சுதந்திர போராட்ட வீரர் மட்டும் இன்றி பெண்கள் உரிமை மற்றும் போராளி ஆவார். இவர் 1861 ஆண்டு பாம்பேவை சேர்ந்த பார்சி குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது இளமை காலத்திலேயே பல்வேறு சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். பாம்பேயில் ஃபைன் மற்றும் பிளேகு நோய் தாக்கிய போது தன்னார்வலராக பணியாற்றினார். மேடம் காமாவுக்கும் பிளேகு நோய் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக லண்டன் சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார் மேடம் காமா. லண்டனில் மேடம் காமா நௌரோஜியை சந்தித்து, இந்திய சுந்திரத்திற்கான பணிகளில் தன்னை இணைத்துக் கொண்டார். 

Latest Videos

சுதந்திர போராட்ட பணிகள்:

இவர்களுடன் இந்திய தேசியவாதிகளான ஹர் டயால், ஷாம்ஜி கிருஷ்ண வர்மா ஆகியோர் சுதந்திர போராட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். பணக்கார ப்ரிடிஷ் வழக்கறிஞரான ரஸ்டம் காமாவை திருமணம் செய்து கொண்ட போதிலும், மேடம் காமா தொடர்ந்து தேசியவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

தேசியவாத நடவடிக்கைகள் காரணமாக, ப்ரிடிஷ் அரசாங்கம் மேடம் காமா இந்தியா திரும்ப அனுமதி மறுத்து விட்டது. இதன் காரணமாக அவர் பாரிஸ் சென்றார். அங்கும் இந்திய தேசியவாதிகள் இடம்பெற்று இருந்த பாரிஸ் இந்திய சொசைட்டியில் பணியாற்றினார். ப்ரிடிஷ் ராணுவ வீரர் சர் வில்லியம் வைலியை கொன்று குவித்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் மதன்லால் திங்ராவின் பெயரை பரைசாற்றும் வகையில், “மதன்ஸ் தல்வார்” எனும் பெயரில் அச்சகம் ஒன்றை துவங்கி நடத்தி வந்தார். 

இந்தியா திரும்ப அனுமதி மறுப்பு:

இதன் காரணமாக ப்ரிட்டன் காமாவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க பிரான்ஸ்-க்கு அழுத்தம் கொடுத்தது. எனினும், பிரான்ஸ் இவ்வாறு செய்ய மறுத்து விட்டது. இதை அடுத்து இந்தியாவில் இருந்த மேடம் காமாவின் சொத்துக்கள் அனைத்தையும் ப்ரிடிஷ் அரசு முடக்கி வைத்தது. லெனின் மேடம் காமாவை சோவியத் யூனியன் வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். ஜெர்மனியில் உள்ள ஸ்டகர்ட் பகுதியில் நடைபெற்ற சர்வதேச சோசியலிஸ்ட் மாநாட்டில் மேடம் காமா முதல் முறையாக வெளிநாட்டில் இந்திய தேசிய கொடியை ஏற்றினார். 

பெண்களுக்கு வாக்குரிமை கோரும் பல்வேறு இயக்கங்களிலும் மேடம் காமா தீவிரமாக பங்கேற்று வந்தார். பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த மேடம் காமாவின் உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து இந்தியா திரும்ப அனுமதிக்கப்பட்டது. உடல் நிலை பாதிக்கப்பட்ட பின் நீண்ட நாள் வாழாத மேடம் காமா தனது 74-வது வயதில் உயிரிழந்தார். இந்திய புரட்சியின் தாய் என்றும் மேடம் காமா அழைக்கப்படுகிறார். 

click me!