Stubble Burning: சுவாசிக்க முடியாத சூழல்! புகை சூழ் டெல்லி-என்சிஆர் மண்டலம்: என்ன காரணம்?

By Pothy Raj  |  First Published Nov 3, 2022, 3:33 PM IST

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் எழுந்துள்ள புகைக்கு 38 சதவீதம் வயல்களில் கழிவுகளை எரிப்பதால் வரும் புகைதான் எனத் தெரியவந்துள்ளது. 


டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் எழுந்துள்ள புகைக்கு 38 சதவீதம் வயல்களில் கழிவுகளை எரிப்பதால் வரும் புகைதான் எனத் தெரியவந்துள்ளது. 

வயல்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் மாசின் அளவு 2.5 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வால் டெல்லியில் பனிப்பொழிவுகூட கறுமை நிறத்தில் உள்ளது.

Latest Videos

undefined

டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் அதிகரித்துவரும் புகையால் அரசியலும் சூடுபிடித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறுகையில் “ கடந்த 2021ம் ஆண்டில், டெல்லி, என்சிஆர் பகுதியில் புகைமூட்டம் அதிகரிப்புக்கு பஞ்சாப் முக்கியக் காரணம். 19 சதவீதப் புகை அதிகரித்துள்ளது, பஞ்சாப்பில் ஆளும் ஆம்ஆத்மி கட்சி டெல்லியை கேஸ் சேம்பர் போல் ஆக்கிவிட்டது” என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் “ வயல்களில் கழிவுகளை எரிப்பதை கட்டுப்படுத்த முடியாவிட்டால், மத்தியஅரசு விலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் நொய்டாவில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இது குறித்து மத்திய புவிஅறிவியல் துறையின் திட்ட இயக்குநர் குப்ரான் பீக் கூறுகையில் “ டெல்லியில் காற்று மாசு 38 சதவீதம் அதிகரித்துவிட்டது. வயல்களில் கழிவுகளை எரிப்பது டெல்லிவரை வருகிறது.

டெல்லியின் காற்று தரம் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது. இன்று காலை நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 419 என்ற அளவில் இருந்தது. தொடர்ந்து டெல்லியில் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது. ஆனால், சனிக்கிழமை முதல் காற்று வீசக்கூடும், காற்றின் திசை மாறும் என்று கணித்திருப்பதால் அதன்பின் ஓரளவு நிம்மதி கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டை தாக்குதல் தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு மரண தண்டனை: உச்ச நீதிமன்றம்

காற்று மாசுக் குறியீட்டில் 400 என்ற அளவுக்கு மேல் அதிகரி்த்தாலே அது ஆபத்தானதாகும், மனிதர்களின் நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளுக்கு ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும். 

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் நேற்று வயல்களில் கழிவுகளை எரிப்பது தொடர்பாக 3,634 சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சீசனில் இதுதான் அதிகமாகும். டெல்லியில் ஏற்பட்ட காற்றுமாசுக்கு 12 சதவீதம் அதிகரிப்புக்கு பஞ்சாப் முக்கியக் காரணமாகும். காற்றும் சாதகமாக வீசாதாததால் புகை அனைத்தும் டெல்லியை நோக்கி நகர்கிறது.  கடந்த வெள்ளிக்கிழமை முதல் பஞ்சாப்பில் தினசரி 1800க்கும் அதிகமான வயல்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு

இந்திய வேளாண் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை, பஞ்சாப்பில் மட்டும் 71,304 வயல் கழிவு தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது கடந்த 2020ம் ஆண்டில் 83,002 ஆக இருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!