rahul: அரசரே! கேள்விக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

By Pothy RajFirst Published Jul 27, 2022, 3:03 PM IST
Highlights

நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு எதிராக கேள்வி எழுப்பிய எம்பிகளை அரசர்(பிரதமர் மோடி) கைது செய்துள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

நாட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு எதிராக கேள்வி எழுப்பிய எம்பிகளை அரசர்(பிரதமர் மோடி) கைது செய்துள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து விலைவாசி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகிறார்கள்

அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்

இது தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இருப்பினும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அனைவரும், தினசரி நாடாளுமன்றத்தின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

sonia gandhi: ed: சோனியா காந்தியிடம் 3-வது முறையாக அமலாக்கப்பிரிவு இன்றும் விசாரணை

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “சிலிண்டர் விலை 1053 ரூபாயாக உயர்ந்தது ஏன்?, தயிர், பருப்பு, தானியங்களுக்கு ஏன் ஜிஎஸ்டி வரி? , கடுகு எண்ணெய் விலை லிட்டர் ரூ.200 ஆக உயர்ந்தது ஏன்?. பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலையின்மை குறித்து கேள்வி எழுப்பிய 23 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.

current bill: என்னது!ரூ.3,419 கோடிக்கு கரண்ட் பில்லா: அதிர்ச்சியில் வீட்டு உரிமையாளருக்கு நெஞ்சுவலி

57 எம்.பிக்களை அரசர்(பிரதமர் மோடி) கைது செய்ய உத்தரவிட்டார். ஜனநாயகத்தின் கோயிலில் கேள்விகளை எதிர்கொள்ள அரசர் அச்சப்படுகிறார். சர்வாதிகளுக்கு எதிராக போராடு எப்படி என எங்களுக்குத்தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

click me!