India@75 கொண்டாட்டம்! - கர்நாடகாவுக்கு வந்த யாத்திரையை கொடியசைத்து ஆளுநர் தவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார்!

By Dinesh TG  |  First Published Jul 20, 2022, 5:07 PM IST

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்சிசி இணைந்து நடத்தும் வஜ்ர ஜெயந்தி யாத்திரை, கர்நாடக மாநிலம் வந்தது. அங்கு கர்நாடக ஆளுநர் தவர்சந்த் கெலாட் துவக்கி வைத்தார்.
 


இந்திய சுதந்திரப் போராட்டத்தின் 75 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏசியாநெட் நியூஸ் மற்றும் என்சிசி இணைந்து 'வஜ்ர ஜெயந்தி யாத்திரையைத் தொடங்கியுள்ளன. நாட்டின் சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னங்கள், ராணுவ தளங்கள், விவசாயம், கலாச்சாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களை ஆராய்ந்து ஒரு பெரிய தொடக்கமாக 20 என்சிசி கேடட்களுடன் இந்த யாத்திரையை தொடங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கிய இந்த யாத்திரையை கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தற்போது, இந்த யாத்திரை தற்போது கார்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு வந்தடைந்தது. தொடர்ந்து பெங்களூரில் ராஜ்பவனில், India@75 கர்நாடகா கொடியேற்ற விழா நடைபெற்றது. அதில், கர்நாடக மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், கர்நாடகா என்சிசி கமாண்டர் பூபேந்தர் சிங் கன்வர், ஆசியாநெட் நியூஸ் சேர்மன் ராஜேஷ் கல்ரா, கன்னட பிரபா மற்றும் சுவர்ணா நியூஸ் தலைமை ஆலோசகர் ரவி ஹெக்டே, சுவர்ணா நியூஸ் எக்சிகியூடிவ் எடிட்டர் அஜித் ஹனுமக்கன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆசியாநெட் நியூஸ் சேர்மன் ராஜேஷ் கல்ரா, கர்நாடகாவில் அம்ருத மஹோத்ஸவ யாத்திரை நடப்பது பெருமையான தருணம் என்றும், கர்நாடகம் ஒரு அழகான மாநிலம். ஏழு உலக அதிசயங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நாங்கள் (ஏசியாநெட்) கர்நாடகாவின் ஏழு அதிசயங்களைக் கண்டுபிடித்து வருகிறோம். பலருக்கும் கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு இடமும், ஏழு உலக அதிசயங்கள் போல் அழகாக தெரிகிறது'' என்றார்.

Latest Videos



பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தேசிய கேடட் கார்ப்ஸுடன் இணைந்து இந்த யாத்ரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள முக்கியமான வரலாற்று இடங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு மையங்கள் வழியாக பயணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

click me!