இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் நம் சுதந்திர போராட்ட வீர வரலாறும், சுதந்திரதிற்காக போராடிய வீரர்களும் மறக்க முடியாதவை ஆகும்.
சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் என்ற பெயர்கள் மிகப் பரிட்சயமானவை என்றாலும் சிவராம் ராஜகுரு மற்ற இருவர் அளவுக்கு அவ்வளவாக அறியப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் கேடா எனும் கிராமத்தில் பிறந்தவர் தான் சிவராம் ராஜகுரு.
undefined
இவர் பகத்சிங் மற்றும் சுகதேவ் ஆகியோருடன் இணைந்து பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்துப் போராடிய மகாராஷ்டிராவை சேர்ந்த புரட்சி வீரர் ஆவார். ராஜ்குரு காந்திஜியின் அகிம்சைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. அதனால் அவர் ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதமேந்திய குழுவில் இணைந்தார். ராஜகுரு பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார்.
பகத் சிங் மற்றும் ராஜகுரு போன்ற தீவிர தேசியவாதிகள் தங்கள் மாவீரன் லாலா லஜபதி ராயின் மரணத்தால் ஆத்திரமடைந்தனர். சைமன் கமிஷனுக்கு எதிரான கண்டனப் பேரணியை வழிநடத்திச் சென்ற ராய்க்கு எதிராக காவல்துறையினரின் கடுமையான தடியடிகள் வாங்கினர். ராஜகுரு பகத் சிங் மற்றும் சுக்தேவ் ஆகியோருடன் சேர்ந்து, ராயின் மரணத்திற்கு பழிவாங்க ஜான் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை படுகொலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
காவல்துறை அதிகாரியை கொன்ற வழக்கில் இந்திய பிரித்தானிய நீதிமன்றம் பகத்சிங் ,ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பு விதித்தது. இந்நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தீர்ப்பின்படி, 1931 ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி மூவருக்கும் ஒரே நாளில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின் இவர்களின் உடல்கள் பஞ்சாப் பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் எனும் பகுதியில் எரியூட்டப்பட்டுள்ளது.