India@75 : ஆங்கிலேயரை பயமுறுத்திய பகத் சிங்கின் நண்பர்.. யார் இந்த அஷ்பகுல்லா கான் ?

By Raghupati R  |  First Published Aug 3, 2022, 10:09 PM IST

நம் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகிறது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட மகாத்மா காந்தி,நேரு,நேதாஜி என பல தலைவர்கள் பற்றி நாம் படித்திருக்கிறோம். 


இன்னமும் கூட நம் சுதந்திரதிற்கு பாடுபட்ட பல்வேறு  தலைவர்களை பற்றி அறியாமல் இருக்கிறோம் என்பதே உண்மை ஆகும். அஷ்பகுல்லா கான் என்ற வீரரை பற்றி நாம் இங்கு பார்க்கலாம். பகத் சிங்குடன் இணைந்து இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியின் இணை நிறுவனராக இருந்தார் அஷ்பகுல்லா கான். உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் பதான் குடும்பத்தில் பிறந்தார் அஷ்பகுல்லா கான். சிறுவனாக இருந்த போதே சுதந்திர இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். 

Latest Videos

சௌரி சௌராவில் நடந்த வன்முறை சம்பவத்திற்குப் பிறகு காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் பெற்றதால் ஏமாற்றமடைந்த இளம் தேசியவாதிகளில் அஷ்பகுல்லா கானும் ஒருவர். அந்நிய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய எழுச்சிக்கான புதிய அமைப்பை உருவாக்கினர். ஆகஸ்ட் 9, 1925 அன்று, அஷ்பகுல்லா கான், சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவர்களது நண்பர்கள் லக்னோவிற்கு அருகிலுள்ள ககோரி என்ற இடத்தில் அரசு ரயிலை வழிமறித்து கொள்ளையடித்து தலைப்புச் செய்தியாக மாறினார். 

தங்கள் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அஷ்பகுல்லா கான் போலீசாரிடம் இருந்து தப்பித்து டெல்லியை சென்றடைந்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, ஒரு நண்பர் அவரைக் காட்டிக்கொடுத்து, அஷ்பகுல்லா கான் இருக்கும் இடத்தைப் பற்றி காவல்துறைக்கு தெரிவித்தார்.

காகோரி வழக்கில் அஷ்பகுல்லா கான் கைது செய்யப்பட்டு, ராம் பிரசாத் பிஸ்மில், ராஜேந்திர லஹிரி, ரோஷன் சிங் மற்றும் பிற தோழர்களுடன் ஃபைசாபாத் சிறையில் 19, டிசம்பர் 1927 அன்று தூக்கிலிடப்பட்டார். புகழ்பெற்ற இந்தி திரைப்படமான ரங் தே பசந்தி கான் மற்றும் அவரது தோழர்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அஷ்பகுல்லா கானின் பெயரில் 230 கோடி ரூபாய் செலவில் விலங்கியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

click me!