IPL 2022: நீ விக்கெட் எடு.. நான் ஃபோட்டோ எடுக்குறேன்..! சாஹல் - தனஸ்ரீ ஜோடியின் அலப்பறை

By karthikeyan V  |  First Published Mar 30, 2022, 10:24 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியின்போது ராஜஸ்தான் ராயல்ஸுக்காக அபாரமாக பந்துவீசி  3 விக்கெட் வீழ்த்திய சாஹலை அவரது மனைவி ஸ்டேடியத்தில் இருந்துகொண்டு புகைப்படம் எடுத்தார். சாஹல் மனைவி புகைப்படம் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
 


ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே புனேவில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 210 ரன்களை குவித்தது. 211 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணி வெறும் 149 ரன்கள் மட்டுமே அடித்து 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

கடந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் நட்சத்திர பவுலராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்துவந்த ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை ஆர்சிபி அணி கழட்டிவிட, இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடுகிறார் சாஹல். சன்ரைசர்ஸூக்கு எதிராக 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாஹல். அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத் மற்றும் ரொமாரியோ ஷெஃபெர்டு ஆகிய மூவரையும் சாஹல் வீழ்த்தினார்.

3 விக்கெட் வீழ்த்திவிட்டு தனது ஸ்டேடியத்தில் அமர்ந்து மேட்ச் பார்த்துக்கொண்டிருந்த தனது மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்தார் சாஹல். சாஹல் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடியதை தனஸ்ரீ ஃபோட்டோ எடுத்தார். தனஸ்ரீ ஃபோட்டோ எடுத்த ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அந்த ஃபோட்டோவிற்கு, நீ (சாஹல்) விக்கெட் எடு; நான் உன்னை(சாஹலை) புகைப்படம் எடுக்கிறேன் என சாஹலின் மனைவி சொல்வதாக கேப்ஷன் கொடுத்து பதிவிட்டது ராஜஸ்தான் அணி. அந்த பதிவு வைரலாகிவருகிறது.
 

click me!