India vs Sri Lanka: 2வது டி20 போட்டியின் டாஸ் ரிப்போர்ட்..! தொடரை வெல்லுமா இந்தியா..? தடுக்குமா இலங்கை..?

By karthikeyan V  |  First Published Feb 26, 2022, 6:52 PM IST

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 


இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு இலங்கை அணி மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.

டி20 தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

Tap to resize

Latest Videos

undefined

கடந்த போட்டியில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து வகையிலும் அபாரமாக செயல்பட்டு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றியை பெற்றது. எனவே இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, காமில் மிஷாரா, சாரித் அசலங்கா, தனுஷ்கா குணதிலகா, தினேஷ் சண்டிமால் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனாகா (கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, பினுரா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா.
 

click me!