நீங்க நினைச்சு பார்க்காத அளவுக்கு இந்த காயில் மருத்துவ குணங்கள் இருக்கு…

 
Published : Mar 27, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
நீங்க நினைச்சு பார்க்காத அளவுக்கு இந்த காயில் மருத்துவ குணங்கள் இருக்கு…

சுருக்கம்

You ever think about the medicinal properties of this piece to be

1.. புடலங்காய் சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டு உடம்புக்கு ஏற்றது.

2.. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும்.

3.. இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

4.. வாத, பித்த கபங்களால் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கும்.

5.. வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும்.

6.. தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

7.. அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

8.. குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள் குறையும்.

9.. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

10.. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து

11.. ஞாபக சக்தியை அதிகரிக்கும். கண் பார்வையைத் தூண்டும்.

12.. சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும்.

13.. விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். 

14.. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

15.. இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி