உங்கள் வீட்டு குட்டீஸ் பற்களைப் பாதுகாக்க எளிய டிப்ஸ்…

Asianet News Tamil  
Published : Mar 25, 2017, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
உங்கள் வீட்டு குட்டீஸ் பற்களைப் பாதுகாக்க எளிய டிப்ஸ்…

சுருக்கம்

Simple Tips to protect your teeth from home cuties ...

குழந்தைகள் பிறந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் பால் பற்கள் வளருவதால், அவர்களுக்கு ஈறு பகுதியில் எரிச்சலாக இருக்கும். அந்த நேரத்தில், பெரும்பாலான குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

இந்தப் பால் பற்களின் வளர்ச்சி ஏழாம் வயதில்தான் முடிவடையும். அந்த நேரத்தில் குறைந்தது 20 பற்களாவது குழந்தைகளுக்கு முளைத்திருக்க வேண்டும். ஏழாம் வயதின் முடிவில்தான் பால் பற்கள் விழ ஆரம்பித்து நிரந்தரமான பற்களின் வருகை ஆரம்பிக்கும்.

இந்த நேரத்தில் குழந்தைகளின் தாடை மற்றும் பற்களின் வேர் நன்றாகக் கடினமாக ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததும், அலட்சியமாக இருக்காமல், பெற்றோர்கள் குழந்தையின் பற்களை தங்கள் விரலால் துலக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு குறைந்த நேரத்தில் பல் துலக்கி, அதிக நேரம் வாய் கொப்பளிக்க பழக்கத்தைச் சொல்லித்தர வேண்டும்..

அதிகப்படியான இனிப்பு உண்பதால் சொத்தைப் பல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற கிருமிகளுக்குப் பல்லை இரையாக்காமல் இருக்க, சாப்பிட்டவுடன் நிறையத் தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

நிறையத் தண்ணீரும் அருந்த வேண்டும்.

இரவு படுக்கும் முன் பாலில் சர்க்கரைச் சேர்க்காமல் கொடுங்கள். காரணம், சர்க்கரையில் உள்ள இனிப்பு பற்களில் தங்கி, சொத்தைப் பற்களை உருவாக்கிவிடும்.

படுக்கும் முன்பு பல் துலக்குவது அவசியம்.

உணவுகளை மென்று அசைபோட்டுச் சாப்பிடும் பழக்கத்தைச் சொல்லிக் கொடுங்கள். இதனால், கன்னப் பகுதியும் ஒட்டிப் போகாமல் அழகாக இருக்கும்

பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் நிறைந்த உணவு முக்கியம். தினமும் உணவில் கீரை வகைகள், பட்டாணி, சுண்டல், ஆப்பிள், பச்சைக் காய்கறிகள், திணை வகைகள் போன்றவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake