ஒல்லி பெல்லியை விரும்பும் பெண்கள் கொழுப்பை சாப்பிடுங்கள்…

 
Published : Mar 25, 2017, 02:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
ஒல்லி பெல்லியை விரும்பும் பெண்கள் கொழுப்பை சாப்பிடுங்கள்…

சுருக்கம்

Belly fat in women who want to eat the skinny

பூசணிக்காய் போல தோற்றம் தர யாரும் விரும்பமாட்டார்கள். அதிலும் பெண்கள் ஒல்லி பெல்லிக்கு மிகவும் ஆசைப்படுவார்கள்.

கொழுப்பு உணவுகளில் உள்ள பல கொழுப்பு அமிலங்களால் பாதகமான விளைவுகள் ஏற்பட்டாலும், நன்மை பயக்கக்கூடிய சில கொழுப்பு அமிலங்களும் இருக்கவே செய்கின்றன. எனவே, பின்வரும் கொழுப்பு உணவுகளை உட்கொண்டு ஒல்லியான தோற்றத்தை பெறலாம்.

1.. யோகர்ட்

உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் யோகர்ட்டுக்கும் இடமுண்டு. இதில் புரோபயாடிக் பாக்டீரியாக்களும் நிறைந்திருப்பதால் அவை அடிவயிற்றுப் பருமனைத் தடுக்கின்றன.

2.. அவகேடோ

ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமில உணவாக உள்ளது. இதில் உள்ள ஒலியீக் அமிலம், அளவுக்கு மீறிய பசி தூண்டுதலை கட்டுப்படுத்துகின்றது. தவிர, உடலில் உள்ள அதிக கொழுப்புச் சத்தை எரிக்க உதவும் புரதம், நார்ச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன.

3.. தேங்காய்

அதிக அளவில் கொழுப்பு அமிலம் நிறைந்த உணவாக தேங்காய் உள்ளது. இது லாரிக் அமிலத்தை அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடியது. இந்த அமிலம் உடலில் கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், அடிவயிறு பருப்பதையும் தடுக்கிறது.

4.. பாதாம் பருப்பு:

இடை பருமனாவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அதாவது, உடல் பருமனைத் தூண்டும் கொழுப்புகளை உறிஞ்சுவதைத் தடுக்கும் கலவைகள் பாதாம் பருப்பில் இருக்கிறதாம்.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!