
நோய்த் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பு அழகையும், ஆரோக்கியத்தையும் கடுமையாக பாதிக்கும். பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது. மாறாக எடையை குறைக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
1.. உடல் பருமனை குறைக்க முயற்சிப்பவர்கள் முதலில் மேற்கொள்ளும் பழக்கம் சாப்பாட்டின் அளவை குறைத்து தீவிர உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பார்கள். ஒருசிலர் பட்டினியும் கிடப்பார்கள். இது தவறான பழக்கம்.
பட்டினி கிடந்தோ, சாப்பாட்டு அளவை குறைத்தோ எடையை குறைக்க முயற்சிப்பது உடலுக்கு நல்லதல்ல.
2.. உணவு கட்டுப்பாட்டை என்பது என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான். கொழுப்புச்சத்து, அதிக கலோரிகள் கொண்ட உணவுகள் உண்பதை தவிர்த்துவிட்டு அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்ட வேண்டும்.
3.. அதிக நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும் பச்சைக்காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது உடல் எடையை வேகமாக குறைக்கும்.
4.. எண்ணெய் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளை அறவே தவிர்த்திடுங்கள்.
5.. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். டீ, காபி குடிப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் பருகுவதும் உடல் எடையை குறைக்க உதவும்.
6.. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடத்தையாவது உடற்பயிற்சி செய்வதற்கு ஒதுக்க வேண்டும்.
7.. உடற்பயிற்சிகள் ஒருபோதும் கடினமானதாக இருந்துவிடக்கூடாது. மெதுவாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், நடனம் என்பது போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும்.