
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியவை
ஒரு இணை சுத்தமான கையுறைகள்,
டிஸ்போஸபிள் ஃபேஸ் மாஸ்க்,
ஸ்டெரிலைஸ்டு காட்டன் ரோல்,
ஸ்டெரிலைஸ்டு டிரெஸ்ஸிங் துணி,
ரோலர் பேண்டேஜ்,
நுண்ணிய துளைகள் கொண்ட, ஒட்டக்கூடிய டேப்,
தரமான ஆன்டிசெப்டிக் லோஷன் (ஸாவ்லான், டெட்டால் போன்றது),
பெட்டாடைன் (Betadine) ஆயின்மென்ட்,
துரு இல்லாத கத்தரிக்கோல்,
குளுகோஸ், எலெக்ட்ரால் போன்ற நீர்ச் சத்துக்கான பொடிகள் பாக்கெட்டுகள்,
பாரசிட்டமால் மாத்திரை, வலி நீக்கும் மாத்திரை மற்றும் அவரவர் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையைப் பொருத்து, ரத்த அழுத்தத்துக்கான மாத்திரை, அன்டாஸிட் ஜெல் போன்றவை.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
** முதல் உதவிப் பெட்டியோ, மற்ற மருந்துகளோ… குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
** குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் முதல் உதவிப் பெட்டி இருக்க வேண்டும்.
** சிவப்பு நிறத்தில் ‘ப்ளஸ்’ குறியிட்ட பெட்டி என்றால், யாருமே பார்த்ததும் எடுக்க முடியும்.
** அதைப் பூட்டிவைக்கக் கூடாது. எமர்ஜென்சி சமயத்தில் சாவியைத் தேடுவதால், வீண் டென்ஷனும் கால விரயமும் உண்டாகும்.
** உபயோகித்த மருந்துகள் மற்றும் பொருள்களுக்குப் பதிலாக மீண்டும் வாங்கிவைத்துவிட வேண்டும்.
** காலாவதி ஆன மருந்துகளை, தேதி பார்த்து உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
** குடும்ப மருத்துவர், அவசர சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்களை ஒரு சீட்டில் குறித்து அந்தப் பெட்டிக்குள்ளேயே வைத்திருப்பது அவசியம்.