
மூச்சுத்திணறல்:
ஏற்கெனவே ‘வீஸிங்’ பிரச்னை இருப்பவர் என்றால், அவர் எடுத்துக் கொள்ளும் இன்ஹேலரை எடுத்துக் கொள்ளச் சொல்லலாம்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டவரை உட்காரவைத்து, மெதுவாக மூச்சுவிடச் செய்ய வேண்டும்.
மயக்கம்:
மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைபடுவதால்தான் மயக்கம் ஏற்படுகிறது.
மயக்கம் வருவதைக் கொஞ்சம் முன்கூட்டியே தெரிந்துகொண்டோமானால், அவர் கீழே விழுவதற்குள், தாங்கிப் பிடித்து, அடிபடுவதில் இருந்து காப்பாற்றிவிடலாம்.
மயங்கியவரை, கீழே படுக்கவைத்து, கால்கள் இரண்டையும் சிறிது உயரத்தில் இருக்குமாறு மேலே தூக்கிவைக்கவும்.
காற்றோட்டம் தேவை. தண்ணீரால் முகத்தைத் துடைக்கலாம். சோடா போன்றவற்றைப் புகட்ட வேண்டாம்.
பக்கவாதம்:
முகம் கோணுதல், பேச்சில் குழறல், கைகள் உதறுதல், வாயில் எச்சில் ஒழுகுதல் போன்றவை ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்.
பாதிக்கப்பட்டவருடன் பேச்சுக் கொடுத்து, அவரை ஆசுவாசப்படுத்த வேண்டும். அவரால் பேசவோ, உங்களுக்குப் பதில் சொல்லவோ முடியாவிட்டாலும், நீங்கள் சொல்வதைக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்.