இந்த சின்ன சின்ன நோய்க்கு எதுக்கு டாக்டர்? வீட்டிலேயே வைத்தியம் இருக்கு…

Asianet News Tamil  
Published : Apr 21, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
இந்த சின்ன சின்ன நோய்க்கு எதுக்கு டாக்டர்? வீட்டிலேயே வைத்தியம் இருக்கு…

சுருக்கம்

What is the doctor for this infectious disease? There is a remedy at home ...

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake