உங்கள் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் வேண்டவே வேண்டாம்! ஏன்?

Asianet News Tamil  
Published : Apr 20, 2017, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
உங்கள் குழந்தைகளுக்கு நூடுல்ஸ் வேண்டவே வேண்டாம்! ஏன்?

சுருக்கம்

Do not pray for your childrens noodles! Why?

நூடுல்ஸ்:

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. அம்மாக்களுக்கும் சட்டென்று சமைத்துக் கொடுத்து தொல்லை ஒழிந்தது என்று பெருமூச்சி விடும் ஒரே உணவு. ஆனால், நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருள் அல்ல.

குழந்தைகள் விரும்பிக் கேட்குது என்று மண்ணை சாப்பிட கொடுப்பீர்களா? ஆனா, அவங்களுக்குப் பிடிக்கும்னு நூடுல்ஸ்-ஐ சாப்பிடக் கொடுத்து நீங்களே உங்கள்  குழந்தைக்கு கல்லறை தோண்டுகிறீர்கள். அவ்வளவு கெடுதி தரும் பொருள் தான் நூடுல்ஸ்.

ஏன் நூடுல்ஸ் வேண்டவே வேண்டாம்:

1.. நூடுல்ஸ் சாப்பிடும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உணவில் இருக்கும் சத்துக்களை உட்கிரகிக்கும் ஆற்றல் குறைந்து போய்விடும். இதனால் வேறு எந்த சத்தாண உணவைக் கொடுத்தாலும் அதனால் குழந்தைகளுக்கு எந்த பலனும் இல்லாமல் போய்விடும்.

2.. துரித நூடுல்ஸ்களில் சேர்க்கப்படும் ஸ்டைரோபோம் எனப்படும் ரசாயனம் புற்றுநோயை உருவாக்கும். எனவே, துரித நூடுல்ஸ் சாப்பிடுவோருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

3.. கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் துரித நூடுல்ஸை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. நூடுல்ஸில் இருக்கும் ரசாயனங்கள் கருவின் வளர்ச்சியை பாதிக்கும் என்பது அறிவியல் பூர்வ உண்மை.

4.. நூடுல்ஸ் விளம்பரங்களில் போடப்படுவதை போல, அதில் எந்த விட்டமின்களும், மினரல்களும் இல்லவே இல்லை. அது வெறும் கார்போஹைட்ரேட் மட்டும்தான். நூடுல்ஸ் என்பது வயிற்றைப் பொருத்தவரை ஒரு ஜங்க் புட். அவ்வளவுதான். இந்த ஜங்க் புட் வயிற்றுக்குள் போனதும் செரிமான இயக்கத்தையே சேதப்படுத்திவிடுகிறது. அதனை செரிமானம் செய்ய வயிற்றுக்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகும். உடல்களை பொறுத்து இந்த நேரம் மாறும்.

5.. பேக் செய்து விற்கப்படும் நூடுல்ஸில் அளவுக்கு அதிகமான சோடியம் கலந்துள்ளது. உடலில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான சோடியம் கலப்பதால் இதய நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படும். இதுவே இந்த நோய்களில் ஏதேனும் ஒன்று ஏற்கனவே இருப்பவர்கள் நூடுல்ஸ் சாப்பிட்டால் அவர்களது நிலைமை இன்னும் மோசம்தான்.

6.. நூடுல்ஸின் வாசத்துக்காக அதில் மோனோசோடியம் க்ளுடாமேட் சேர்க்கப்படுகிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஒருவர் நூடுல்ஸ் சாப்பிட்டதும் தலைவலி, முகத்தில் வீக்கம், வலி, வயிற்றில் எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அவருக்கு மோனோசோடியம் க்ளுடாமேட் ஒத்துக் கொள்ளாது.

7.. நூடுல்ஸில் எக்கச்சக்க கொழுப்பு இருக்கிறது. மேலும், நூடுல்ஸில் சோடியம் அதிகமாக சேர்க்கப்படுவதால், அது உடலில் நீர் சக்தி குறையக் காரணமாகிவிடும். இதனால் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் தங்க வாய்ப்பு ஏற்படுகிறது. உடல் பருமன் பல வியாதிகளுக்கு தாய் வீடு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நூடுஸ்ஸ் உடல் பருமனுக்கே சொந்த வீடு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

8.. நூடுல்ஸை அதிகம் சாப்பிட்டு வந்தால் வயிறு மந்தமாகி அதன் இயல்பு நிலையை இழந்து விடுகிறது. இதனால் பலருக்கும் உணவு செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

9.. நூடுல்ஸ் அதன் தளர்த்தியான நிலையை பெற ப்ரோபைலைன் க்ளைகோல் என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடும் ஆற்றல் பெற்றது. நூடுல்ஸ் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உடல் பாகங்களை இந்த ரசாயனம் தாக்கி அதனை சேதப்படுத்திவிடும் ஆபத்தும் உள்ளது.

10.. நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலின் சாதாரண இயக்கத் தன்மையே கெட்டு விடுவதாக ஆராய்ச்சிகள் உறுதி செய்துள்ளன. அதில் உள்ள ரசாயனங்கள் மனித உடலில் அடிக்கடி சேர்வதால், மனித உடலின் இயக்கம் மாறுபட்டு உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படக் காரணமாக அமைகின்றன.

இவ்வளவு தீங்கு உள்ளதை இனியும் உங்க  குழந்தைகளுக்கு கொடுக்க போறீங்களா?

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!