குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் தயிரின் மருத்துவ குணங்கள்…

Asianet News Tamil  
Published : Apr 20, 2017, 02:11 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடும் தயிரின் மருத்துவ குணங்கள்…

சுருக்கம்

Medicinal properties of children who love the most to children and adults ...

நாள்தோறும் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் மிகவும் சிறந்தது தயிர். இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அப்படியே சாப்பிடுவர். இது நமது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு உதவுகிறது என்று தெரியுமா? இதை வாசிங்க…

க.. லாக்டோஸ் சகிப்புத் தன்மையின்மையால் அவதிப்படுபவர்களும் எந்த ஒரு கவலையும் இன்றி தயிரை உட்கொள்ளலாம்.

உ.. கால்சியம் நிறைந்த தயிர் பற்கள், எலும்புகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

ங.. செரிமான பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது.

ச.. தயிர் வேகமாக செரிமானமாகிவிடும்.

ரு.. உணவை வேகமாக உறிஞ்ச உங்கள் உடலுக்கு உதவும்.

சா.. காரசாரமான உணவை சாப்பிட்டால், அதனுடன் சேர்த்து தயிரையும் உண்ணுவது நல்லது.

எ.. வாய் புண் பிரச்சனைகள் தீரும் பாக்டீரியாவால் ஏற்படும் சில வாய் பிரச்சனைகளை தடுக்க தயிர் உதவிடும்.

அ.. உப்பு அல்லது சர்க்கரையுடன் தயிரை சாப்பிட்டால், பசியை அதிகரிக்க அது மிகவும் நல்லதாகும்.

கூ.. ஹார்மோன் சமநிலை இன்மையின் விளைவால் உடல் பருமன் ஏற்படும். கார்டிசோ அளவுகளை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க தயிர் உதவிடும். ஆனால் மற்றவர்களோ தினசரி கலோரி உட்கொள்ளும் அளவை பொறுத்து தான் தயிரை உட்கொள்ள வேண்டும்.

ஒ.. மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க தயிர் உதவும். தயிர் உங்களை சாந்தப்படுத்தும். உங்களுக்குள் குளிர்ச்சியான உணர்வை உண்டாக்கும்.

கக.. மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம். தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

கஉ.. ஆரோக்கியமான இதயத்தை பேணிட தயிர் உதவிடும். கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், ஆரோக்கியமான இதயத்தை பராமரித்திடலாம்.

கங.. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.

கச.. பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.

 

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!